இலங்கையின் புதிய பிரதமராக ரணில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்: ஜனாதிபதி செயலகம்

ranil_wickramasinghe_001

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி 15வது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ம் இணைப்பு

ரணில் நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பாலும் நாளை மாலை அல்லது நாளை மறுதினம் காலை வேளையில் அவர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் அமைப்பின் அடிப்படையில் கூடுதல் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பினரை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க முடியும்.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அழைப்பினை விரைவில் விடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அழைப்பின் பின்னர்ää ரணில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

– tamilwin.com

TAGS: