நடைபெற்ற தேர்தலின் அனைத்து முடிவுகளும் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களையும்(தேசிய பட்டியலோடு சேர்த்து) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 95 ஆசனங்களையும். தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் ஜேவிபி கட்சி 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மேலும் இதரக் கட்சிகள் 2 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனூடாக 106 ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியமைக்க வருமாறு மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாளை அழைப்பு விடுக்க உள்ளார்.
இருப்பினும் பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சி தனக்கு பெரும்பாண்மை உள்ளதை நிரூபித்தாகவேண்டும். பெரும்பாண்மை என்பது 113 ஆசனங்கள் தமக்கு ஆதரவாக இருக்கவேண்டும். இதனை அவர்கள் நிரூபிக்கும் பட்சத்திலேயே அவர்களால் முறையான அரசு ஒன்றை நிறுவ முடியும். தற்போது மகிந்த தரப்பில் இருந்து சில கட்சி தாவல் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அமைச்சு பதவி தந்தால் நான் ரணிலோடு இணைய தயார் என்று சிலர் தூது அனுப்பியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒர் இரு நாடிகளில் கட்சி தாவல் முடிய , ரணில் அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு பலமான ஒரு அரசாங்கத்தை நிச்சயம் அமைக்கும். அதனூடாக சில அரசியல் அமைப்பு சட்டங்களை அவர்கள் திருத்தவும் உள்ளார்கள்.
இதனூடாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு , சில சலுகைகள் அல்லது அடிப்படையான உரிமைகள் சில வழங்கப்படலாம் என்றும். இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வழிவகுக்கப்படலாம் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.
-athirvu.com