வட கிழக்கில் உள்ள தமிழர்கள் , மீண்டும் ஒரு முறை தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இதேவேளை ஸ்ரீதரன் சார்பான இணையங்கள் மற்றும் சிலர் பேஸ் புக்கிலும் தோற்றுப்போன கஜேந்திர குமாரை மிகவும் கேவலமான முறையில் நக்கலடித்து எழுதி வருகிறார்கள். முதலில் அவரும் ஒரு தமிழர் தான் என்பதனை நினைவில் கொள்வது நல்லது. இன்று சிங்களவர்களை பாருங்கள். அவர்கள் எவராவது தோற்றுப்போன மற்றைய சிங்கள அரசியல்வாதிகளை பார்த்து நக்கல் அடிக்கிறார்களா ? இல்லையே …. அந்த நாகரீகம் கூட தமிழர்கள் பக்கம் இல்லை. ஒரு ஒற்றுமை இல்லை. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூட விஷமிகள் வேலை என்ற சொல்லைப் பாவிக்கிறார்கள். அதாவது தமது அரசியலை , எதிர்த்து வேறு ஒருவர் அரசியல் செய்ய வந்தால் போதும் உடனே அவர் துரோகி அல்லது விஷமி ஆகிவிடுகிறார்.
இது இவ்வாறு இருக்க தாம் இந்த தேர்தலில் வென்றால் 2016ம் ஆண்டு இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறியுள்ளார். இதனை மேலும் பல உறுப்பினர்கள் மேடைகளில் உறுதிசெய்தும் உள்ளார்கள். இவர்கள் கூறுவது போல 2016ம் ஆண்டு இலங்கை இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வருமா ? இதுபோன்ற பல தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து தான் மக்கள் முன் அவர்கள் வாக்கு போடும் படி கேட்டுக்கொண்டார்கள். எனவே அதனை அவர்கள் நிச்சயம் நிறைவேற்றி தான் ஆகவேண்டும். மேலும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் போட்டியிட்ட அதன் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்கள் , கடந்த தேர்தலில் சுமார் 6,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
ஆனால் இம் முறை நடந்த தேர்தலில் அவர் 15,000 வாக்குகளை பெற்றிருக்கிறார். எனவே அவரது கட்சி வளர்ந்துள்ளது என்பதனை தான் அது எடுத்துக் காட்டுகிறது. மக்கள் மத்தியில் அவர்கள் மேலும் 5 வருடங்கள் வேலை செய்தால் 2020ல் நடக்க வுள்ள தேர்தலில் அவர்கள் மீண்டும் நிச்சயம் களம் இறங்குவார்கள். எனவே எந்தக் கட்சி மக்களுக்காக உழைக்கிறதோ அக்கட்சியே இறுதியில் வெல்லும். தோல்வே வெற்றியின் அறிகுறியாக இருக்கிறது. இன்று வெற்றிக் கழிப்பில் உள்ளவர்கள் , நாளை தாம் செய்யவேண்டியதை மறந்தால் அவர்களும் பாடங்களை கற்றுக்கொள்ள நேரிடும். இது உலக நியதி.
-athirvu.com

























