இலங்கையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.
மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.
ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்து, மாவட்ட ரீதியாக அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தேசியப் பட்டியல் மூலம இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதால், தமிழ் தேியக் கூட்டமைப்பின் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com
இலங்கையில் வாழும் தமிழர்களிடையே இருக்கின்ற இன மொழியுணர்வு இந்தத் தேர்தலின் மூலம் இவர்கள் உலகிற்க்குக் காட்டிய ஒற்றுமை இவற்றையெல்லாம் கண்டப் பின்பு, மற்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் குறிப்பாக தமிழக மக்கள் இவர்களின் பாதையைப் பின் பற்றிச் செல்ல வேண்டும். இலங்கை ராணுவம் போரின் போது போரென்றப் போர்வையில் மற்ற நாடுகளின் துணையோடு அன்று நடத்திய கொடூரமான இன அழிப்பை கண்டு இவர்கள் அஞ்சவுமில்லை; துவண்டுவிடமில்லை. பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் இவர்களிடமிருந்து இன்று கற்றுக் கொள்ள வேண்டிய முதல் நல்லப் பாடம் இது.