சீனாவின் எல்லையையொட்டிய மியான்மரின் கோகாங் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கோகங் பகுதியில், அமைதி, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னும் அமையவில்லை. எனவே, அங்கு அறிவிக்கப்பட்டிருந்த நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த ஊடகம் தெரிவித்தது.
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள கோகாங் பகுதியில் சீனாவைப் பூர்விமாகமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
-http://www.dinamani.com