ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாரிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்றவரை அமெரிக்க சிறப்புப் படையினர் முறியடித்தனர்.
பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த Thalys நிறுவனத்தின் அதிவேக ரயிலில் 550க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது கழிவறைக்குள்ளே இருந்து திடீரென வெளிவந்த மர்ம நபர் ஒருவர் Kalashnikov வகை துப்பாக்கியால் அங்கிருந்த பயணிகளைச் சுட முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் சிறப்பு பிரிவான US Marines படையினரில் 2 பேர்,
சமயோசிதமாக அந்த தீவிரவாதியை தாக்கி துப்பாக்கியை கைப்பற்றினர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிற்கப்பட்டது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் Marines ஒருவருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகவும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தீவிரவாத தாக்குதலை முறியடித்தது குறித்து தகவலறிந்த பிரான்சின் உள்விவகார மந்திரி பேர்னார்ட் அமெரிக்க சிறப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்,
மேலும் தற்காப்பு ஆயுதங்கள் ஏதுமின்றி பெரும் உயிர்ச் சேதத்தை முறியடித்த வீரத்தை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே அவசர சேவைகள் வந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடும் வரையில் அந்த தீவிரவாதியை US Marines படையினர் கைது செய்து வைத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த தீவிரவாதி மொராக்கொ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தாக்குதலுக்கு உரிய காரணம் எதுவென்று இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
-http://world.lankasri.com