தென் கொரியாவின் மீது போர் தொடுக்கும் விதமாக வட கொரியா தனது எல்லையில் ஆயுதங்களை குவித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
வட கொரியாவும் தென் கொரியாவும் பல ஆண்டுகள் நேர் எதிர் துருவங்களாகவே உள்ளன. இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தம் மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அவ்வப்போது இரு நாடுகளும் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த வியாழனன்று வட கொரியா நடத்திய பிராங்கி தாக்குதலில் தென் கொரியாவை சேர்ந்த 2 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வட கொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை எல்லைப்பகுதிகளில் தென் கொரியா தொடங்கியது.
இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா எல்லையில் ஆயுதங்களை குவித்து வருகிறது.
மேலும் தென் கொரியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணு ஆயுத தாக்குதல் நடத்த வடகொரியாவின் ஜனாதிபதி கிம்- ஜோங்-உண் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று இருநாட்டின் முக்கிய தலைவர்களும் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போர் அறிவிப்பினால் கொரிய தீபகற்பம் மட்டுமின்று உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.



-http://world.lankasri.com

























