கடலுக்கடியில் வேவு பார்க்கும் “கருவி”: அதிர்ச்சியில் சீனா

china_seaweapon_001தெற்கு சீன கடலுக்கடியில் வேவு பார்க்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவின் ஹைனன் மாகாணத்தில் ஹுவாங் யுன்லாய் என்பவர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.

இந்த கருவி குறித்து ஆராய்சி செய்ததில், அது நீரடி கண்காணிப்பு வேவு பார்க்கும் கருவி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனா கூறியதாவது, சீன கடல் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கத்திலேயே இந்த கருவியை அயல் நாட்டினர் விட்டுச்சென்றுள்ளனர்.

இந்த கருவி மட்டுமல்லாமல் வேறு சில கருவிகளும் தெற்கு சீன கடலுக்கடியில் வைக்கப்பட்டிருக்கலாம் என சீனா குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாமல், தெற்கு கடற்பகுதியில் இது அபாயங்களை தோற்றுவித்துள்ளது என்று கூறியுள்ளது.

-http://world.lankasri.com