அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் சந்திப்பில் தமிழ் மக்களுக்குரிய முக்கியமான விடயங்கள் அனைத்தும் பேசப்பட்டது.
விசேடமாக, 65 வருடகாலமாக ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு எட்டாத விடயமாக இருந்து வந்துள்ளது.
அந்த வகையில், நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட்டு, ஒற்றுமையாக ஒரே நாட்டுக்குள் வாழ்வது அத்தியாவசியம்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு அதுவே ஒரேயோரு வழி.
இனிமேல் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் ஊடாக அந்த தீர்வை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு, அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம் என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் உடனான சந்திப்பு தொடர்பாக லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com