இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம்!- இந்திய ஊடகம்

nisha_bishwalஇலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மிகவும் சிறப்பாகவும், நல்லவிதமாக இலங்கை நோக்கி பார்ப்பதற்கு அமெரிக்கா ஆரம்பித்து விட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்ததின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வெளியாகும் காரணங்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு ஆதரவு வழங்கும் பிரேரணை ஒன்றினை முன்வைப்பதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் அதனை முன்வைப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் குறிப்பிட்டிருந்தார்.

அக் கருத்தின் மூலம் இலங்கை தொடர்பில் அமெரிக்கா இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றத்தினை காண முடிகின்றதென இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அது இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு சிறப்பான சூழ்சிலை ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நல்லிணக்க வேலை திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக மாற்றமடைந்த சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஒன்று காணப்படுவதனை தான் ஏற்று கொள்வதாக நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: