ஆஸ்திரியா அருகே லொறியில் அகதிகள் உயிரிழக்க காரணமானவர்களில் 4 பேரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

bodies_001ஆஸ்திரியா அருகே ஹங்கேரி நாட்டின் எல்லையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் 70க்கும் மேற்பட்ட அழுகிய நிலையில் மனித சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்கி மூன், ஒட்டு மொத்த மனித குலத்திற்கே ஏற்பட்ட பாரிய கொடும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்றார்.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு உறுதியான அரசியல் கூட்டு முயற்சி அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

உயிருக்கும் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு கேட்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து பெருவாரியான மக்கள் தங்களின் விதியை பணப்பசி கொண்ட ஆள்க்கட்த்தல்க்காரர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் புலம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் மன்றம்,

இதில் 2500குல் அதிகமானோர் மத்தியதரைக்கடல் பகுதியில் இன்னல்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, லொறிக்குள் மரணமடைந்த அந்த 70 பேரும் அவர்களின் ஒட்டு மொத்த பயணத்திற்காக 7 லட்சம் யூரோ வரை வழங்கியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் கைதானவர்களில் 3 பேர் பல்கேரியா நாட்டினரும் ஒருவர் அஃப்கான் நாட்டினருமாவார்.

-http://world.lankasri.com