ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பிறரின் தலையை துண்டிப்பது ஒன்றும் புதிது அல்ல.
இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மந்திரம், கடவுளை அவமதித்தது, ஓரிணச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு, கொள்ளை, விழிப்புணர்வு இயக்கங்களில் சேர்ந்தது, அவைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தது, நுசயிரி படைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த 39 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதியில் இருந்து கடந்த 29ம் தேதி வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மட்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுமக்கள் 32 பேர், 2 பெண்கள், எதிரி அமைப்புகளைச் சேர்ந்த 11 போராளிகள், பத்திரிக்கையாளர் ஒருவர் உள்பட 91 பேரை கொலை செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 பொதுமக்களை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். அதில் 181 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அவர்கள் அமைப்பை விட்டுவிட்டு வீட்டிற்கு தப்பியோடியபோதும், வெளிநாடுகளுக்கு உளவு பார்த்தபோதும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.