”யுத்தங்களிலிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு பிரான்ஸ் நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்”: பிரதமரின் உருக்கமான பேச்சு

refugee_pm_001உள்நாட்டு யுத்தங்கள், கலவரங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்களிலிருந்து தப்பி வரும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை பிரான்ஸ் நாடு கெளரவமாக வரவேற்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் உருக்கமாக பேசியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தவர்களின் நெருக்கடி குறித்து பிரான்ஸ் நாட்டில் உள்ள லா ரோசெல்லே நகரில் கடந்த ஞாயிறு அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய பிரான்ஸ் நாட்டின் பிரதமரான மேனுவல் வால்ஸ், உள்நாட்டு யுத்தங்கள், அடக்குமுறைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல்களிலிருந்து தப்பி தஞ்சம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களை கெளரவத்துடன் வரவேற்க பிரான்ஸ் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

’’உங்கள் நாடுகளில் உள்ள பணி செய்து ஓய்ந்துள்ள நபர்கள் மற்றும் வீடுகள் இல்லாமல் அவதிப்படும் ஏழை மக்களை எங்களிடம் கொடுங்கள், அவர்களுக்கு நாங்கள் வெளிச்சம் அளிக்கிறோம்” என்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலையில் பொரிக்கப்பட்டுள்ள இந்த வாசகத்தை பிரதமர் குறிப்பிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

எனினும், சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் பிரதமர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

தகுந்த காரணங்கள் இல்லாமல் தங்களுடைய பொருளாதார நிலையை மட்டும் உயர்த்திக்கொள்வதற்காக வரும் சட்டவிரோத கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என பிரதமர் மேனுவல் வால்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டு உயிரிழந்த சுமார் 200 புலம்பெயர்ந்த்வர்களுக்காக பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com