நீருக்குள் தத்தளிக்கும் ஆட்டை துரத்தி சாகடிக்கும் திருவிழா: காட்டுமிராண்டித்தனமென குமுறும் விலங்கு ஆர்வலர்கள்

nepal_festival_001நேபாளத்தில் உள்ள Khokana கிராமத்தில் இளைஞர்கள் கூட்டம் தண்ணீரில் வீசப்பட்ட ஆட்டை துரத்தி சாகடிப்பதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

Khokana கிராம மக்கள் புனிதமாக கருதப்படும் Deu எனும் குளத்தில் உயிருடன் இருக்கும் இளம்வயது ஆட்டுக்குட்டியை வீசி, தண்ணீரில் அது தத்தளிக்கும்போது இளைஞர்கள் பாய்ந்து சென்று கைகளாலேயே ஆட்டுக்குட்டியை சாகடிக்கின்றனர்.

இந்த விழா 900 ஆண்டுகள் பழமையானதாக கூறும் இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட இனத்தாரால் மட்டுமே ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

12-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதன் முதலாக இந்த விழா கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.

Deu குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி இறந்ததைத் தொடர்ந்து அங்குள்ள தேவதையை சமாதானப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஆடு ஒன்றை குளத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு தற்போது விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது, அப்பாவி ஜீவன்களை கடவுளின் பெயரால் வதைப்பதை காட்டுமிராண்டித்தனம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

உலகம் முழுவதும் இருந்து விலங்கு ஆர்வலர்களால் இந்த விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருந்தும் அவுஸ்திரேலியா மற்றும் நேபாளத்தில் இயங்கி வரும் விலங்குகள் நல அமைப்பும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com