இரண்டாம் உலக போர் வெற்றி தொடர்பான அணிவகுப்புகளை சீனா நடத்தியுள்ளது. இரண்டாம் மகா யுத்தத்தின் போது ஜப்பானை தோற்கடித்ததை முன்னிட்டு, இந்த அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது சீனாவின் 80 சதவீதமான இராணுவ பலம் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அதிக அளவான இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் இராணுவ பலம் குறித்து உலக அளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனா பிராந்திய ரீதியான தளம்பல் நிலைகளை கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய வெற்றி நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அலஸ்கா கடற்பரப்பில் சீனாவின் ஐந்து யுத்தக் கப்பல்களை அவதானித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-http://www.athirvu.com/
பலம் என்பது எதிரியின் பலவீனத்தைக் கண்டுப் பிடித்து தாக்குவது. வெறும் ஆயுதங்கள் எதிரியை வெல்ல உதவாது. இதில் அனுபவமே கை கொடுக்கும். அந்த அனுபவம் அமெரிக்காவிடம் இருக்கின்றது. சீன என்னையும் எம் பலத்தையும் பாரு என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றது. கடந்த 20 ஆண்டுகளில் சீனா எந்த போரிலும் பங்கேற்றதில்லை. அப்புறம் அந்நாட்டு படை வீரர்களுக்கு எப்படி வரும் அனுபவம். .