ரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்வதற்காக ஹங்கேரியின் புத்தபிஸ்ட் நகரின் இரயில் நிலையத்தில் குவிந்தனர்.
எனினும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆஸ்திரியாவுக்கு அழைத்து செல்வதாக கூறி அவர்களில் சிலரை அகதிகள் முகாமில் அடைக்க ஹங்கேரி அரசு முயன்றது.
இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் இனியும் ஹெங்கேரியை நம்பி பயனில்லை என்று ஆஸ்திரியாவுக்கு நடந்தே செல்ல தொடங்கியுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் சட்ட விரோதமாக எல்லையை கடப்பவர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கும்விதமாக அகதிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளர்.
இதன் காரணமாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசார் மற்றும் ராணுவத்தினர் எல்லைப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் ஆஸ்திரியாவுக்கு செல்லும் அகதிகளை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com