அகதிகள் வசிப்பதற்காக தனி தீவையே விலைக்கு வாங்க முடிவு செய்துள்ள கோடிஸ்வரர்

egypt_billionireஎகிப்து நாட்டை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவர் அகதிகள் வசிப்பதற்காக தனி தீவை வாங்க முடிவு செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் நாகுப் சவிரிஸ். பிரபல கோடிஸ்வரரான இவர் ஓராஸ்காம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாக உள்ளார்.

மேலும் இவருக்கு சொந்தமாக எகிப்தில் எல் கவுனா ரிசார்ட் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தான் அகதிகளுக்காக தனி நாட்டை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் எனவே கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தங்களிடம் உள்ள தீவுகளில் ஒன்றை விலைக்கு தர வேண்டும் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, அகதிகள் வசிப்பதற்காக தனி தீவை விலைக்கு தருமாறு கிரீஸ் மற்றும் இத்தாலி அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன்.

இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியமாகும். அவர்களிடம் ஏராளமான தீவுகள் உள்ளன.

அவற்றின் விலை 10 மில்லியன் டொலரில் இருந்து 100 மில்லியன் டொலர் வரை இருக்கும்.

எனவே அந்த நாடுகளிடம் இருந்து தீவுகளை வாங்கி அகதிகளுக்கு தர போகிறேன். மேலும் அங்கு அவர்களுக்கு தற்காலிக வசிப்பிடம் அமைத்து தரவும் முடிவுசெய்துள்ளேன்.

எனினும் மற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகள், பள்ளிகள் , மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்க முயலவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com