மதுவால் மகனை மறந்த பெண்: தாயாக மாறி பால் கொடுத்த நாய்

dog_small_child_001சிலி நாட்டில் சாலையோரமாக பசியுடன் கதறி அழுத 2 வயது குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று பாலூட்டி உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வறுமையில் சிக்கி தவித்த பெற்றோர்கள் தங்களுடைய 2 வயது ஆண் குழந்தையை வாகனங்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் விட்டு சென்றுள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான அந்த தாயார், குழந்தையை மீட்க திரும்ப வரவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஊட்டுச்சத்து குறைப்பாடினாலும், கடுமையான பசியின் காரணமாக அந்த குழந்தை வீறிட்டு அழுதவாறு இருந்துள்ளது.

அப்பகுதியில் உள்ளவர்கள் எவரும் இதனை கவனிக்காத நிலையில், அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த ரெய்னா என்ற நாய் குழந்தைக்கு அருகில் சென்றுள்ளது.

பின்னர், அருகில் படுத்திருந்த அந்த நாயின் மடியில் குழந்தை பசி தீர பால் குடித்துள்ளது.

இதனை அந்த நாயின் உரிமையாளரான லோறி எஸ்குடேரோ கவனித்து ஆச்சர்யம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை உடனடியாக பொலிசாரிடம் தெரிவிக்க அங்கு வந்த பொலிசாரும் குழந்தைக்கு நாய் பாலூட்டும் அந்த காட்சியை கண்டுள்ளனர்.

இது குறித்து பேசிய நாயின் உரிமையாளர், “தற்போது தனது நாய் கர்ப்பமாக இருக்கிறது என்றும், பசியால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குழந்தையை தனது நாய் காப்பாற்றியுள்ளது ஒரு தாயான தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளனர்.

பராமரிப்பின்றி மிக மோசமான சுற்றுப்புறத்திலிருந்து குழந்தையை மீட்ட பொலிசார், அதனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர்.

தனது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்த குழந்தையின் தாயார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆனால், பொலிசாரின் விசாரணையின்போது தாயார் அப்போதும் மிகவும் குடிபோதையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனினும், குழந்தைக்கு உடல்ரீதியாக எந்த துன்புறுத்தலும் செய்யாததால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com