நாசிகள் இருந்த தேசம்: எப்படி இப்படி மாறியது என்பது பெரும் ஆச்சரிய விடையம் தான்

ஒரு காலத்தில் நாசிகள் என்று சொல்லப்படும் , மிகவும் கொடூரமான இனவெறி பிடித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் தான் ஜேர்மனி. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நாசிகள் கொடி கட்டிப் பறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை நாசிகள் கொலை செய்தார்கள். அது நட பல வருடங்கள் ஆன பின்னர் கூட, ஜேர்மனியில் இன வெறி அடங்கவில்லை. ஆனால் அன் நாடு கடந்த 20 வருடங்களில் பல மாற்றங்களை கண்டுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் , நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்வு தான். கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவைக்கும் இன் நிகழ்வு , உலக அரங்கில் உண்ணிப்பாக அவதானிக்கப்பட்ட ஒரு விடையமாக உள்ளது. அது என்னவென்றால் , சிரியா போன்ற அரபு நாடுகளில் உள்ள சுமார் 80,000 ஆயிரம் அகதிகளை ஜேர்மன் நாடு தான் உள்வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ள விடையம் தான்.

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக சுமார் 5,000 பேரை நேற்றைய தினம் ஆஸ்திரியா ஊடாக ஜேர்மனி உள்வாங்கிக்கொண்டது. ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் இந்த அறிவிப்பை விடுத்தபோது. அது ஜேர்மன் மக்களுக்கு பிடிக்காது என்றும். அவர்கள் இதனை நிச்சயம் எதிர்பார்கள் என்றும் எதிர்வு கூறப்பட்டது. சிலர் அடுத்த தேர்தலில் அஞ்சலா மேர்கல் கட்சி நிச்சயம் தோல்வியை தழுவும் என்று கூட கூறினார்கள். ஆனால் நேற்றைய தினம் அடுக்கடுக்காக , ஆஸ்திரியா நாட்டில் இருந்து வந்த ரயிலில் நூற்றுக்கணக்கான அகதிகள் வந்து இறங்கினார்கள். பிராங்பேட் நகரில் , மற்றும் சில நகரங்களுக்கு வந்த அகதிகளை ஜேர்மன் மக்கள் வரவேற்றுள்ளார்கள். அதிலும் அன் நகரில் உள்ள மக்கள் , அவர்களுக்கு பாண் , பணீஸ் , ரொட்டி துண்டுகளையும் தண்ணீர் போத்தல் டீ மற்றும் காபி கொடுத்து வரவேற்றுள்ளார்கள்.

சிரியாவில் இருந்து வந்த அகதிகள் தமது நன்றி உணவர்வை வெளிப்படுத்து முகமாக அஞ்சலா மேர்கலின் புகைப்படங்களை தாங்கி வந்து இறங்கினார்கள். புது வாழ்க்கை ஒன்றை வாழ தாம் ஆசைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த அகதிகளை ஜேர்மனீய மக்கள் வரவேற்ற விதத்தை பார்த்து உலகமே அதிர்ந்து போனது. அகதிகளை அழைத்துச் செல்ல வந்திருந்த ஜேர்மன் அதிகாரிகள் பலர் , சிறுவர்களை முத்தமிட்டு வரவேற்றது உணர்ச்சி பொங்கும் தருணமாக அமைந்திருந்தது. சிங்கள இன வெறியர்களை விட அதிக இன வெறி கொண்ட நாடாக பல தாசாப்தங்களுக்கு முன்னர் இருந்து வந்த ஜேர்மன் நாடு. தற்போது இது போன்ற மாற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால் இலங்கை தீவில் மட்டும் இன்று வரை இன வெறி தலை தூக்கி ஆடிவருவது வருந்தத் தக்க விடையமே.

-http://www.athirvu.com