போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா! – ஆழமான கருத்துக் கணிப்பு

america_crime_00ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதவான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதே தொழில்நுட்பங்களின் உதவியுடன் உள்நாட்டு அரசு விசாரிக்க கோருவதுதான் அந்த தீர்மானத்தில் நோக்கம்.

அதாவது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும்.

இது தொடர்பாக இலங்கைக்கு வந்த நிஷா பிஸ்வால் கூறும்போது,

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடைபெற நாங்கள் முழுமையாக உதவுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அளித்த உறுதிமொழிக்கு நேரெதிராய் உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

இதற்கு சம்மதம் தெரிவித்த அமெரிக்கா, மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இது தொடர்பாக பேசுவதாகவும் கூறியது.  ஆனால் இன்று திடீரென அமெரிக்கா மாற்றி பேசுவது ஏன்?

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததும்,

பின்னர் சமீபத்தில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் அவரது கட்சி பெரும்பான்மை பெற தவறியதும் நம் அனைவருக்கும் தெரியும்.

இதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தற்போது ஒரு தேசிய அரசாங்கம் அமைந்துள்ளது.

ஆனால் இந்த தேர்தல்களும் இதனால் அமைந்த அரசும் நீடித்த மாற்றத்தை கொண்டுவரும் என்ற நம்பிக்கை அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளுக்கு தவறாக விதைக்கப்பட்டது.

அதாவது புதிய அரசு போர்க்குற்றம் குறித்து உண்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்யும் என்று அவைகள் நம்புகின்றன.

ராஜபக்ச மற்றும் இராணுவ வீரர்கள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய பெரும் அட்டூழியங்கள் எந்த போரின் போதும் நிகழாத ஒன்று என்று ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தின் சிறிசேனவே தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போர்க்குற்றங்களின் ஈடுபட்ட இராணுவ வீரர்களை பாதுகாக்க முயற்சி செய்கின்றது.

தற்போது அமைந்துள்ள அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கவே விரும்புகிறது.

முக்கிய அரசியல் அதிகாரிகள் மீது மனித உரிமைகள் குற்றம் சாட்டப்படும் போது இலங்கையின் நீதிதுறை நடுநிலையோடு தீர்ப்பு வழங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் தீவிரவாத தடுப்புசட்டம் இன்னும் சட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக மட்டும் இலங்கையின் இராணுவத்தினரும் பொலிசாரும் குற்றங்களில் ஈடுபடவில்லை.

கடந்த 2007ஆம் ஆண்டு ஹெய்ட்டியில் இலங்கையின் அமைதிப்படையினர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டது.

ஒரு வேளை அமெரிக்காவின் விருப்பப்படி உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டும் உண்மையானால், நீதி வழங்கவேண்டுமென்றால் நீதி துறையில் சில மாற்றங்கள் செய்யவேண்டும்.

தற்போதுள்ள நிலையில் அது கடினம். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்படி ஒதுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவார்கள் என்பது தொடர்பான அடிப்படையை உள்ளடக்கியது இந்த விவகாரம்.

எனவே உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச நீதி புரட்டப்படாதிருப்பதுக்கு ஒரு அடித்தளமாக அமையக்கூடும்.

– JS Tissainayagam –

-http://www.tamilwin.com

TAGS: