யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள அரசியல் மோதல் – இந்திய நாளிதழ்

mavai_cv2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது.

இந்த மோதல் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,  தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது விக்னேஸ்வரன் தமது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் கட்சிக்கூட்டத்தின்போது இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்படும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சவாலுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களில் 5 ஆசனங்களில் வெற்றிப்பெற்றமை குறித்து அரசியல் நோக்குநர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விக்னேஸ்வரனுடன் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் கடும்போக்காளர்கள் உள்ளக சவால்களில் ஈடுபட்டார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் சிவில் சமூகம் விடுதலைப் புலிகளின் ஆதரவு புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் ஊடகங்கள் வெளியக சவால்விடுப்போராக இருந்தார்கள்.

இதில் கடும்போக்காளர்கள் போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச தீர்ப்பாயத்தை கோருகின்றனர். எனினும் மிதவாதிகள் சர்வதேச விசாரணை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளநிலையில் சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.்

எதிர்கட்சியாக அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழர் விடயத்தில் உதவும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

அத்துடன் அமரிக்கா ஐரோப்பியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை நாடாமல் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுடியாது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

எனினும் பதவிகளை கடும்போக்காளர்கள் எதிர்க்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்கத்தைய நாடுகளை நம்புவது தமிழ் மக்களுக்கு உதவாது என்றும் அவர்கள் குறிப்பிடுவதாக இந்திய நாளிதழ் கூறியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: