மண்டையில் சுடும் சிங்கள ராணுவத்தை அடையாளம் காண முற்படுகிறதாம் இலங்கை புலனாய்வு !

srisriஇலங்கை அரச படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் சனல்4 ஆவணப்படங்களில் இடம்பெறும் இராணுவ உறுப்பினர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இலங்கை இராணுவ நீதிமன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் புதிய இராணுவ நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவ உறுப்பினர்களிடம் விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படைத்தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வாவின் உத்தரவின் பேரில்அவரது நேரடி கண்காணிப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் உள்ள அறை ஒன்றிலேயே இந்த விசாரணை நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் சுமேத பெரேராவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவே இந்த இராணுவ நீதிமன்றில் விசாரணையை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இறுதிப்போரின்போது படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய படைத்தரப்பின் கட்டளை அதிகாரிகளை அடுத்த வாரம் இந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.athirvu.com

TAGS: