பாம்புக் கடிகளுக்கு வழங்கப்படும் விஷமுறிவு மருந்தை தயாரித்து வந்த ஒரு நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டதால், பாம்புக் கடி விஷ முறிவு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், பாம்புப் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபிரென்ச் நிறுவனம் தயாரித்து வந்த குறிப்பிட்ட பாம்பு விஷ முறிவு மருந்து உற்பத்தியை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டது. இதனால், தற்போதிருக்கும் விஷ முறிவு மருந்தும், அடுத்த ஆண்டுக்குள் தீர்ந்துவிடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-http://www.dinamani.com