அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மனிதாபிமானம், கண்ணியம் மற்றும் நேர்மையுடன் அணுக வேண்டும் என ஐரோப்பிய மக்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஜான் க்ளாட் யங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஐரோப்பிய ஒன்றியம் வலுவான நிலையில் இல்லை என்றாலும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் நிலவும் சூழல்கள் காரணமாக, ஐரோப்பா நம்பிக்கையின் ஒளிவிளக்காக பார்க்கப்படுகிறது என அவர் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உருக்கமான உரையிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.
கட்டாயமாக அகதிகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் 1,60,000 மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் எளிமையான வகையில் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு உறுப்பு நாடுகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
புதிய பிரேரணை இப்போது எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
-http://world.lankasri.com