மங்கோலிய நாட்டவரான அல்டான்துயா ஷரீபூ கொலை தொடர்பில் புலனாய்வு ஆவணப்படம் தயாரித்த அல் ஜசீரா செய்தியாளர் நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோதே நாடு கடத்தப்பட்டார்.
அல் ஜசீராவின் வாராந்திர நிகழ்ச்சியான 101 East-இல் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய செய்தியாளரான மேரி என் ஜோலியின் நடவடிக்கை “மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்” என உள்துறை அமைச்சு கருதியதால் ஜூன் 14-இல் அவர் நாடு கடத்தப்பட்டார்.
ஆனால், அது அவர் அல்டான்துயா கொலை பற்றிய ஆவணப் படத்தைத் தயாரிப்பதைத் தடுக்கவில்லை. ஜோலி, ஆஸ்திரேலியாவில் உள்ள சிரூலைக் கண்டு பிடித்து அவரிடம் அல்டான்துயா கொல்லப்பட்ட அன்றிரவு நடந்தவற்றையெல்லாம் கேட்டறிந்தார்.
‘Murder in Malaysia (மலேசியாவில் கொலை) என்னும் அந்த ஆவணப்படம் இன்று காலை மணி 6.30க்கு ஒளியேறியது. இன்று மாலை 5.30க்கு அது மறுஒளிபரப்பாகும். அல் ஜசீரா அகப் பக்கத்திலும் இந்த ஆவணப் படத்தைப் பார்க்கலாம்.
இவ்வளவு அநியாயம் நடந்தும் கேட்க நாதி இல்லை– ஐக்கிய நாடு என்ன செய்கின்றது? உலக நாடுகள் என்ன செய்கின்றன? எல்லாரும் வாயை பொத்திக்கொண்டு இருக்கின்றனர். இவனெல்லாம் ஏன் கடவுளை நம்பவேண்டும்? எல்லாமே பகல் வேஷம்.
”அவனுக்கு இபோது நல்ல காளம் எல்லாமே சாதகமா அமைஞ்சிடுது பொருத்திருந் பார்ப்போம்…!!!
நாடு நாசமா போகுது .சீக்கிரம் மொட்டை தலையணை வெளியே விரடனும் .சிக்கிரம் ஒரு முடிவு செய்யுங்கள்
“AL JAZEERA” செய்தியாளரை வெளியேற்றியதன் மூலம் நாங்கள்தான் உலகிலேயே மிகவும் “மடத்தனமான எருமைகள்” என உலகிற்கு மறுபடியும் நிருபித்து விட்டார்கள்.
அமெரிக்கா ஈராக் மீது தாக்குதல் நடத்தியபோது, உண்மையான செய்திகளை வெளியிடுவதில் CNN-னை விட “AL JAZEERA”-வின் செய்திகள்தான் உண்மையானவை என நமது நாட்டு “மட எருமைகள்” நற்சான்றிதழ் வழங்கி விட்டதால், “AL JAZEERA” அல்தாந்துயா கொலையில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு என பொய்யான செய்திகளை வெளியிட்டாலும், “AL JAZEERA” செய்திதான் உண்மை என்று மக்கள் 100-க்கு 200 சதவீதம் நம்புகிறார்கள் என்றால் அதற்கு காரணம் நமது நாட்டு “மட எருமைகள்”தான்.
தற்போதைய பிரதமருக்கு மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட அல்தாந்துயாவை தெரியாதாம்………………..
இன்னொரு ஹா ஹா ஹா ஹா
சட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, கொலை, கொள்ளை, பித்தலாட்டம் செய்து ஆடுபுலியாட்டம் போடும் தலைவனுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கும் எருமைகளை முதலில் உதைக்க வேண்டும்!!! புகைந்துக் கொண்டிருப்பது ஒருநாள் கொழுந்து எரியவே செய்யும்!!!