கற்பழித்தால் ஆண்மை அகற்றம் செய்யப்படும்; அமெரிக்காவில் நிறைவேறிய மசோதா

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குட்டித் தீவு கயாம். இங்கு பெண்கள் கற்பழிக்கப்படுவது மிக அதிக அளவில் உள்ளது. அதாவது சராசரியாக 1 லட்சம் பெண்களில் 64 பேர் கற்பழிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதனால் கவலை அடைந்த கயாம் அரசு அண்மையில் பரபரப்பான மசோதா ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியது. கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்படும் ஆண்களின் ஆண்மையை ரசாயன முறையில் அகற்றலாம் அல்லது ஆண்மையை அகற்ற அறுவை சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இந்த மசோதா 8-7 என்ற ஓட்டு கணக்கில் மயிரிழையில் வெற்றி பெற்றது. பலத்த சர்ச்சைக்கு இடையே இந்த மசோதா கயாமில் நிறைவேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கற்பழிப்பு குற்றங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவின் தேசிய சராசரி, ஒரு லட்சம் பெண்களுக்கு 25.2 சதவீதம் ஆகும். அங்கு உள்ள 50 மாகாணங்களில் அலாஸ்காவில்தான் மிக அதிகமாக ஒரு லட்சத்துக்கு 87.6 சதவீத பெண்கள் கற்பழிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.athirvu.com