ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிப்பு

un_sl_war_001இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு நாளை மறுதினம் (14) ஆரம்பமாகவுள்ளதுடன் அதன்போது குறித்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எழுத்து மூலம் பதில் வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆகியோர் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

-http://www.tamilcnnlk.com

TAGS: