தீவிரவாதிகளால் மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கப்படலாம்: எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் MI6 அதிகாரி

uk_not_safeguard_001தீவிரவாதிகள் தங்கள் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என முன்னாள் MI6 அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் MI6 அதிகாரியான Sir John Sawers மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஒலிம்பிக் போட்டிகள் போன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதுமற்ற ஒரு நிகழ்ச்சியை பிரித்தானியாவால் இனிமேல் நடத்த முடியாது என்றார்.

தீவிரவாதிகள் இனி விமானங்களை கடத்தவோ அது போன்ற சிக்கலான திட்டங்களை செயல்படுத்தவோ முயல மாட்டார்கள் என தெரிவித்த அவர், எளிதான செயல்களால் அதிக பலனை அடையவே விரும்புவார்கள் என்றார்.

Charrlie Hebdo அலுவலக தாக்குதல் போன்று இனிவரும் காலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கலாம் என குறிப்பிட்ட Sir John Sawers ஆனால் இதுபோன்ற தாக்குதல்களை உளவுத்துறையால் கூட தடுக்க முடியாது என்றார்.

ஐரோப்பாவில் உள்ள இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளால் ஈர்க்கப்படுவது கவலைதரக்கூடியது என தெரிவித்த அவர், இஸ்லாமிய சமுதாயத்தினருடன் உளவுத்துரை நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார்.

-http://world.lankasri.com