பேசுவதெல்லாம் தமிழ் . பெயர் இந்தியன் எப் எம் மின்னல் ? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பிதற்றுகிறோம். இந்த கட்டுரையை எழுதும் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் பேட்டி மின்னலில் ஒலி ஏறிக்கொண்டு இருக்கிறது . மக்கள நடுவே…. தமிழா தமிழா தமிழா நீ சாதிக்க பிறந்தவன் தானடா என்ற பாடலுடன் தொடங்கியது !
எத்தனை தமிழ் ஆராட்சி மாநாடுகள், தமிழர் விழாக்கள , பொங்கு தமிழ் ஆரவாரங்கள் , தமிழர் பாதுகாப்பு மாநாடுகள், தமிழ் மண்ணாங்கட்டி மாண்புமிகுகள்.இத்தனையையும் ஒரு மின்னல் எப் எம் குமரன் குத்ரிவிட்டார் என்ற தகவல் நமது கண்களை பிதுங்க வைத்துள்ளது. யார் இந்த குமரன்? இவர் தமிழன் இல்லையா?
இன்று 15/9/2015 நம்மை தமிழன் என்றால் யார் என்று ஆய்வுப்பூர்வமாக உணர்த்திய தமிழினத் தலைவன் பெங்களூர் ஐயா பெரியவர் குணா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு ஒரு தமிழனாக பிறந்த நாள் வாழ்த்துக்கூற வெந்து நிற்கிறேன். அந்த அளவுக்கு மலேசியாவில் தமிழ் துரோகிகள் கூட்டம்.
இலங்கை ரா கூட்டம் இங்கேயும் தமிழுக்கும் தமிழனுக்கும் உளவு பார்க்க வந்து விட்டது போல உணர்கிறேன். கடந்த சில காலமாக ஹாங்காங்கில் அடுத்த தமிழர் பாதுக்கப்பு மாநாடு சம்மதமாக நடந்த பேச்சில் சில தகவல்கள் கிடைத்து தமிழர்களுக்கு கடைசியில் சீனாதான் உதவும் என்ற வியப்பை பெற்றோம்.
தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் குரைக்க எந்த நாயும் காணோம்.
இடை நிலைப்பளிகளில் தமிழை இழக்கிறோம். மின்னல் எப் எமில் வானொலி தமிழ் அடையாளத்தை இழந்து புதிய இந்தியன் தமிழில் பேசுதாம். ஒரு மொழிக்கும் சொந்தமில்லாத வெறும் 500 ஆண்டுக்கால வரலாற்றைககொண்ட இந்தியன் என்ற நாட்டில் முந்திப்பிறந்த தமிழுக்கும் தமிழனுக்கும் மின்னல் குமரன் புதிய வரலாறு ஒன்றை ஏற்றி வைக்க நாமெல்லாம் ஊமைகளாக இருக்க முடியாது.
இப்படித்தான் பதவிக்கும் புகழுக்கும் பணத்துக்கும் சோரம் போன பல தமிழ் துரோகிகளை தமிழர்கள் சந்தித்து சலிப்பு அடைத்துவிட்டோம்.
தனி ஒரு குமரனுக்கு இப்படி ஒரு தைரியம் வர யார்க காரணம் என்ற ஆய்வில் ….அவர்தான் என்றாகிய விந்தையில் விரக்தி கொண்டுள்ளோம்.
தி எச் ராகவில் தமிழை தொலைத்து அங்கு ஒரு கோட்டான் கூட்டம் எஞ்சொயீ என்கிறது. அஸ்ட்ரோ பெர்னாமா காசு இல்லை என்று திட்ட மிட்ட தமிழ், தமிழர் அழிப்புகளை அரங்கேற்றி விட்டுள்ளது. 524 தமிழ்பள்ளிகளில் தமிழாம். இடை நிலைக்கு வந்ததும் ஆப்பாம்.
நிலவை காட்டி சோறு ஊட்டிய அவ்வை கதை இன்று அரசியல் வேசமிட்டு காக்கை கூட்டங்கள் எங்கள் ஜாதி என்ற பாரதியின் பாடல்கள் எல்லாம் ஏட்டின் காயங்களாக இரவோடு இரவா இந்தியன் மின்னல் எப் எம் என்றாகி விட்டது.
மலேசியாத தமிழர்கள் இந்தியனா ? அப்போது இந்தியாவில் இருந்து வந்த இதரவர்கள் பேசும் மொழிக்கு என்ன வானொலி ? இந்தியாவின் இந்தியன் வரலாறு என்ன? தமிழர்களின் மொழி வரலாறு என்ன ? உலகின் 120 மில்லியன் தமிழர்களின் மொழியில் இந்தியன அல்லது ஹிந்தி, சமஸ்கிருத மொழியிகளின் கலப்பு என்ன? தமிழன் தமிழ்பபடைப்புகள் ஏன் இந்தியனாக சித்தரிக்க வேண்டும் குமரா ?
அவன் இரவில் பெற்றான் சுதந்திரம் இன்னும் விடிய வில்லை என்கிறான் தமிழகத் தமிழன். மலேசியா தமிழனுக்கோ சுதந்திரம் என்பது மொழி, இனம் இந்த இரண்டும் இந்தியன் பெட்டைககோழிக்கு கூட்டிக்கொடுத்த முட்டையாய் அழுகும் நிலைக்கு நீதான் காரணமா?
தமிழ் மொழி அரங்கம் இருண்ட குகையாக கதி இல்லாமல் பலி வாங்கல் நடக்கிறது இதற்கு இப்போது இந்தியன் மின்னலுக்கு நீ ஒரு இடி அமினா ?
உலகில் எத்தைனையோ தமிழினத தலைவர்களின் வரலாறுகளை படித்தோம் . இவரைப்போன்ற தூயத் தமிழ்த தலைவரை எங்கும் காணோம். ஐயா பெரியவர் குணா அவர்களை இந்த நூற்றாண்டின் தமிழனினத தலைவராகவும். தமிழ் மொழி தலைவராக ஐயா மொழி ஞாயிறு தேவ நேயர் பாவணார் அவர்களை தமிழ் மொழிததலைவராகவும் என் தலைவன் மேதகு பிரபாகரனை தமிழீழத் தமிழ் வீரனாக் பார்க்கிறோம்!
இந்த மூவரையும் இந்த நமது தமிழா இனம் ஏனோ அறியாமல், தெரியாமல், புரியாமல் யாருக்கோ விழா எடுக்கும் பேதமையை காண்கிறோம். இந்நாட்டில் தமிழ் எங்கள் உயிர் என்று போராட்டம் நடத்திய தமிழ் வேல் அவர்களை மறந்து விட்டோம். இன்று கண்ணதாசனுக்கும், வாலிக்கும் விஸ்வ நாதனுக்கும் சினிமா நாதம் பாடுகிறீர்கள் .
தமிழ் மின்னல் எப் எம் இன்று இந்தியன் மின்னல் எப் எம் என்று மாற்றிய மின்னல் குழப்பி குமரனை யாரும் ஏதும் கேற்க முடியாத வக்கற்ற சமுதாய தவளைகளை வைத்து குமுறும் நிலையில் எதிர்த்து குரைக்க ஒரு……. காணோம்.
வருவோம் தயாரகுங்கள்.
-தமிழர் குரல் / தமிழர் சங்கம்
பொன் ரங்கன்
ஐயா பொன்னுரங்கா ! நீங்கள் எழுதியது போல் நானும் எழுத முடியும் !!ஆனால் எந்த பருப்பும் வேகப்போவது இல்லை . வேறு ஏதாவது வழி இருக்கா என்று சொல்லுங்கள் , செயலில் இறங்குவோம் !!!
இப்படி பெயர் மாற்ற வாங்கிய பணம் எவ்வளவோ? பணமே மாயமே!
தானே இராஜா தானே மந்திரி என்றாகி விட்டது குமரனின் கதை. எப்படி இந்திய ஆய்வியல்துறை என்று பெயர் மாற்றி தமிழ் மொழி மலாயா பல்கலைகழகத்தில் ஊசலாடுகின்றதோ அதேபோல் மின்னலிலும் இனி தமிழ் ஊசலாடும். பிற மொழி நிகழ்வுகளுக்கு இது வழி வகுத்து தமிழ் மெல்ல மெல்ல சாவும். இந்த நாட்டு தமிழர்களில் பெரும்பாலோர் உண்மையிலேயே ஈர மரக் கட்டைகள்தான். தமிழரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் சமரசிங்கே நீர் வாழ்க. தமிழன் எக்கேடு கெட்டுப் போனா யாருக்கும் ஒன்றும் ஆகப் போவதில்லை. நானும் இனி சமரசிங்கே கட்சிதான்.
ஐயா பொன் ரங்கன் நாமதான் வாய்கிழிய கத்துகிறோம் பல தமிழர்கள் யடமாக வாழ்கிறார்கள் .. அந்நியன் என்றுமில்லாதவாறு மிகப்பெரிய அளவில் நம் இருப்பை வரலாற்றை மொழியை காலிபன்னுகிறான்!!
தனியார் வானொலியில் அந்நியன் தமிழை சிறுக சிறுக அழிக்கிறான்!
தைபுசதிலும் ஆலய விழாக்களிலும் தமிழர் வழிபாட்டை சிதைக்கும் வண்ணம் சிலர் !!
தமிழ் பேசுகிறான் நமக்காக நம் மொழிக்காக குரல் கொடுக்கிறான் என்று நாம் நம்பி ஏமாறுகிறோம் .. சரியான நேரத்தில் வடுகன் தன் புத்தியை காம்பிப்பான் ..மொழி விசயத்தில் நாமதான் போராடவேண்டும் ..மொழியை சிதைக்கும் அந்நியன் சட்டைய பிடித்து நாமதான் கேட்கணும் .. வரவர இவனுங்க அட்டகாசம் தாங்க முடியல .. இந்து சந்து சங்கத்திலும் எல்லாம் இவனுங்க ஆளுக பண்ணுற அலப்பறை தாங்க முடியல ..தமிழர்கள் ஜடமாக இனிமேலும் இருந்தால் இந்து சங்க தலைமை பதவி தமிழனுக்கு எட்டாக்கனி என்பதை எழுதி வச்சுகோங்க ..
ஆலய தலைமைகளை பணத்தாலும் பதவியாலும் அடாவடிதனதாலும் பரவலாக கைபற்றபடுகிறது ..
பெரும்பான்மையாக நாமிருந்து ஒரு சிறு கூட்டத்தை தலைமை தாங்க விட்டு பலவற்றையும் பறிகொடுக்கிறோம் .. ஒருவடுகன் ஆரிய அறுபது வருட கணக்கு தமிழ் புத்தாண்டு என்கிறான் ..இன்னொரு வடுகன் (கீரமணி ) தமிழர் பொங்கலை திராவிட பொங்கலாம் …
ஒவ்வொரு தமிழின (சாதி அமைப்புக்கள் )குழுக்களோடும் நாம் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும் ..
இனம் மொழி சம்பந்தமாக தொடர்சியாக கலந்துரையாடவேண்டும் ..
அப்படி செயல்படுவோமானால் திராவிட ஆரிய கழுகுகளிடமிருந்து இனத்தையும் மொழியையும் காக்க முடியும் ..
மற்ற இந்திய மொழியை ஆதரிப்போம் அனால் ஹிந்தியை நெருங்க விடக் கூடாது என் என்றால் மற்ற மொழியை ஓரங் கட்ட நினைக்கும் ஒரு மொழியை இன்று இந்திய அரசாங்கம் தந்திரமாக இந்திய முழுக்க புகுத்தி இப்போது ஐநா வில் புகுத்த முயற்சி செய்கிறது. இது நடந்தால் இந்தியன் என்றால் ஹிந்தி மட்டும் தான் மற்ற மொழிகள் சும்மா என்று ஆகிவிடும். இந்த நயவஞ்சக மோடிவித்தை இந்தியர் வாழும் அணைத்து இடத்திலும் நடக்கிறது, எச்சிரிக்கை.
மலேசியாவிலே தமிழர் அல்லாதவரும் இருக்காங்க . ஆனா மின்னல் FM non tamils கி மதிப்பு தருவத . sunday லே வேற மொழி குக் விடுமுறை தர ஒரே நிலையம் உலகத்திலே மலேசியா மின்னல் FM தான் அனால் நீங்கள் தமிழர்க்கு மட்டும் ஒரு அலை வேணும்னு கேக்கறது ஞயம் தான் .
முதலில் அந்த குமரன் , பிறப்பால் ஒரு தமிழனா என கண்டு பிடியுங்கள் .மற்றவை பிறகு .
vasantha மலேசியாவிலே தமிழர் அல்லாதவரும் இருக்காங்க!!
இருக்கட்டும் யாரு இல்லன்னா ? பிரச்சனை அதுவல்ல ..
எமது மொழியை தமிழரல்லாதார் பேசலாம் நடிக்கலாம் பாடலாம் சம்பாதிக்கலாம் நாங்கள் தடுக்கமாட்டோம் ..
ஆனால் எம்மொழியை சிதைக்ககூடாது .. நன்றிகெட்ட தனமாக சோறுபோடும் எங்கள் தாய் மொழியை மற்றவர் சிதைக்க அனுமதியோம் ..
முதலில் உலகின் முதல் 24 மணி நேர தமிழ் வானொலி இப்பொழுது உலகின் முதல் 24 மணி நேர இந்திய வானொலி !!!
இதை மாற்றியதற்கு மின்னல் fm அல்லது RTM முதலில் விளக்கம் தர வேண்டும் . தமிழ் வானொலி என்பதை மீண்டும் கொண்டு வர வேண்டும். மற்ற மொழிகாரன்கலுகாக விட்டு கொடுத்தது போதும், இதை அணைத்து தமிழ் இயக்கங்களும் ஓன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும் அதுவும் உடனடியாக செய்ய வேண்டும். முன்பு UM மில் தமிழ் மொழி faculty இந்திய மொழி faculty யாக மாற்றிய பொழுது கோ சா. அவர்கள் தலைமையில் மீட்டு எடுக்க பட்டது . தமிழ் இயக்ககளின் ஓன்று பட்ட குரல் ஒன்றே வழி ! ஒன்றினிய நான் தயார் ……
மாநியத்துக்காகவும் தலைவர் பதவிக்காகவும் அமைப்பு நடத்தும் தமிழ் தலைவர்களே ஏன் இன்னும் மரண அமைதி !?
இப்படியே இருந்தீர்களேயானால் தநேந்திரன்போன்று இன்னொருவர் உருவாகிவிடுவார் ..
தனேந்திரன் இப்பெல்லாம் தமிழுக்காக ரொம்பவும் உழைக்கிறார் !!
நூல் வெளியிடு! தமிழ் இலக்கிய மாநாடு !தமிழ் எழுத்தாளர் கொவுரவிப்பு !பொற்கிழி பொன்னாடை ! இப்போ தமிழ் இடைநிலை பள்ளி !
தமிழன் நிச்சயமாக இவர்களின் அரசியலை கண்டு உள்ளம் குளிர்ந்துபோவான் என்பது வரலாறு .
தமிழன் அனைத்திலும் ஏமாந்த சொங்கிங்க என்பதும் வரலாறு அது வேறகதை .
இஸ்லாமிய /கிறிஸ்தவ / இந்து என்றில்லாமல் தாய்மொழி விசயத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் ..
இந்து தமிழனுக்கு மட்டுமான பிரச்சனையாக ஒதுங்க கூடாது ..
நாம் (தமிழர்கள்)அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை மனதில்வைத்து செயல்பட்டோமானால் நம்மொழியை எவராலும் அழிக்கமுடியாது..
இறந்தவருக்கு அஞ்சலி, மானிய மேடைகள், சுய விளம்பர மேடைகள், புத்தகம் வெளியிட்டு சம்பாதிப்பது போன்றவைகளில் மட்டுமே இந்த தமிழ் இயக்கங்கள் அல்லது அவைகளின் தலைமைத்துவம் குறிக்கோள் . இது போன்ற இன மான விடயங்களில் சிறிது கூட எந்த தலைவனுக்கும் ஏன் கொஞ்சம் கூட அக்கறை இல்லை ? தைரியம் இல்லை என்றால் மற்றவர்களுக்கு வழி விட்டு விலக வேண்டியதுதானே ? தன்மானம் மற்றும் தைரியம் இல்லதவநேல்லாம் எதற்குடா தலைவனாக ஆசை ??????
இந்த கூட்டம் உள்ளவரை அந்த கூட்டம் தன் வேலையை செய்தும் ….
தாய்மொழி விசயத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் ..
இந்து தமிழனுக்கு மட்டுமான பிரச்சனையாக ஒதுங்க கூடாது ..
நாம் (தமிழர்கள்)அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை மனதில்வைத்து செயல்பட்டோமானால் நம்மொழியை எவராலும் அழிக்கமுடியாது..2014 ஆண்டு -தேசிய மலாய் பள்ளி -66446 /,சீனா பள்ளி 12254,/ தமிழ் மாணவர்கள் ,தமிழ் பள்ளி 88543 இந்திய/தமிழ்
மாணவர்கள்.முதலில் தமிழர்கள் ,மலேசியா தமிழர்கள் 100% ,தம் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப முடியுமா ,நான் தமிழன் அல்ல தமிழ் பள்ளியில் படித்தேன் ,ஏன் மகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பினேன் .பேச்சில் வீரம் ,செயலில் என்ன ?தமிழர்க்கு ஒரு சவால் !…………
(தமிழர்கள்)அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை மனதில்வைத்து செயல்பட்டோமானால் நம்மொழியை எவராலும் அழிக்கமுடியாது..2014 ஆண்டு -தேசிய மலாய் பள்ளி -66446 /,சீனா பள்ளி 12254,/ தமிழ் மாணவர்கள் ,தமிழ் பள்ளி 88543 இந்திய/தமிழ்
மாணவர்கள்.முதலில் தமிழர்கள் ,மலேசியா தமிழர்கள் 100% ,தம் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப முடியுமா ,நான் தமிழன் அல்ல தமிழ் பள்ளியில் படித்தேன் ,ஏன் மகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பினேன் .பேச்சில் வீரம் ,செயலில் என்ன ?தமிழர்க்கு ஒரு சவால் !…………
ஹமிட் பெலசான்- ,பிறப்பால் தமிழனாக இருந்து என்ன பயன் ?தமிழில் எழுத ,படிக்க தெரிய வில்லையென்றால்……..
தமிழர் பாதுகாப்பு செயலகம் என்ன செய்கிறது , தமிழர் குரல் வழி, கிளம்பிட்டாரு பொன் ரங்கன், சத்தம், போடாமல் மாநாடு போட்டு , மாற்றும் ஐய, வானொலி பெட்டியை , ஹிந்தி , தெலுகு , மலையாளம் , பஞ்சாப் , மொழி பாடல் அனைத்தையும் நிறுத்தும்
தமிழ் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் முதலில் தமிழ் பள்ளியில் படிக்கின்றனரா என்று பார்த்து அவர்களை வார்த்தையால் போட வேண்டும். அடுத்து இந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படிக்கின்றனவா என்று பார்த்து பொது மக்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அப்பத்தான் அவனவன் வெட்கம் வந்தாவது தத்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் படிக்க வைப்பான். இனி உறவினர்களோ நண்பர்களோ அவர் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் படிக்க வைக்கவில்லையானால் நேரடியாகவே நமது ஆதங்கத்தை தெரிவிப்போம். தமிழார்வர்கள் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால் நம் மக்கள் ஓரளவாவது திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
நான் கல்வித்துறையைச் சார்ந்த நபர்தான். நானறிந்து பல தமிழர்கள் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிக்கல்விகளை மிகவும் உயர்வாக நினைப்பதையும், அக்கல்வி மூலம்தான் தன் பிள்ளை கல்வியில் உயர் நிலையை அடையக்கூடும் எனும் எண்ணத்தில் உழல்வதை பரவலாகக் காண முடிகிறது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இவர்களுக்கு தக்க பதிலடியை தர நாம் தயங்கியதே இல்லை. பக்கத்து வீட்டில் ஒரு தமிழ்க் குடும்பம், மூன்று குழந்தைகள். இரண்டு குழந்தைகள் சீன ஆரம்பப் பள்ளியில், அவர்களுக்கு தக்க விதத்தில் எடுத்துக் கூறியதிலும், இடித்துரைத்ததிலும் இப்பொழுது மூன்றாவது குழந்தை தமிழ்ப்பள்ளிக்கு போகப் போகிறது. மிகவும் மகிழ்ச்சி. இப்படியே பலரும். நமது இனத்தில் கட்டுப்பாடுகள் குறைவு, தன்மானமும், தன்னம்பிக்கையும் நம்மினத்தில் வெகுவேகமாக குறைந்து வருகிறது, இன, மொழி, மதப் பற்றுகள் நீங்கி மந்தையென நாகரீக மாயையில் ஆட்கொன்டு காலந்தள்ளுகிறது நம் இனம். பாவம் நம் இளவல்களின் எதிர்காலம்.
சூரியகாந்தியின் (மஞ்சள் மலர்) கருத்தை வரவேற்கின்றேன்.
மஞ்சள் மலர் அவர்களுக்கு வணக்கம்,
மகிழ்ச்சியான தகவல். நீங்கள் கல்வித்துரையில் .என்றதும் எனக்கு ஆர்வக்கோளாறு போலும். தமிழர்களின் இந்த சிக்க்ளுக்கெல்லாம் ஆசிரியர்கள் பள்ளி போதனா விதிகளில் மட்டும் இருக்குகாமல் சற்று தமிழர் வரலாறுகளையும் இடை இடையே சொன்னால். ஆரிய ஆட்டமும் , திராவிடர் கூட்டமும் , இந்து மய ஆட்டமும் தமிழர்களை எப்படி குழப்பி ஆதித் தமிழர்களின் அடையாளங்களை அழித்த உண்மைகளை உணர்த்தும் போதும் நமது ஒப்பீடல் முடிவுகள் புலப்படும். இதைத்ததான் தமிழர் களம் , நாம் தமிழர் , தமிழர் குரல் , தமிழர் சங்கங்கள் செய்கின்றன. நீங்கள் நினைக்கும் அந்த காலம் மாறி வருகிறது. தமிழர்களாக மாற்றுவோம்.உங்கள் கல்வி குணத்தை அக்கறையோடு தமிழர்களுக்கு தாருங்கள். தமிழையும் தமிழர்களையும் வார்தேடுப்போம். நன்றி தமிழர்களாய் எழுவோம்.
தமிழக முதல்வர் மாண்பு மிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் இலங்கை ராஜபக்சே மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான தீர்மானத்துக்கு மலேசியா தமிழர்களும் தமிழ் குரல், தமிழர் சங்கம் உலகத் தமிழர் மையம் மற்றும் அணைத்து மலாசியா மக்கள சார்பாக நமது நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறோம் .ஈழத் தமிழர்களின் மீதான உயர்வுக்கு தமிழக அரசும் இந்தியாவும் மனித உரிமைக்கு மதிப்பளித்து உலக அமைதிக்கு மேலும் பல ஆக்ககரமான திட்டங்களையும் பொருளியல் உதவிகளையும் தந்து உதவ வேண்டுகிறோம். இலங்கையின் தமிழீழ தனி நாட்டிற்கு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனி தமிழ்ழீழம் காண கோரிக்கை வைக்கிறோம். இதற்கு மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முன் நின்று நிகழ்வுகளை நகர்த்த வேண்டுகிறோம்.
நன்றி ,வணக்கம்.
மலேசியா மக்கள் சார்பில்
தமிழர் சங்கம். தமிழர் குரல் ,தமிழர் மையம்
மலேசியா தமிழர் சங்கங்களின் பேரவை
மலேசியா இந்தியர் இயக்க பேரவை.
நம் இளைஞர்கள் குண்டர் கும்பல், வெட்டு குத்து என்று அழிகின்றனர். நம் பெண்கள் ஆட்டம் நூறு வகை ஆடி விட்டு, அழகு போன பின் 30 வயதுக்கு மேல் மாப்பிளை தேடுகின்றனர், அதனால் இந்திய பிறப்பு விகிதம் 1.5 தானாம். ஒரு தாயின் வயது ஏற ஏற அவர்களுக்கு பிறக்கும் குழந்தை குறையுடன் பிறக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலை நீடித்தால் என்னதான் முயற்சி செய்தாலும், தமிழ் பள்ளி மூடுவதையும், கோயில் உடைபடுவதையும், தமிழ் காணாமல் போகவும், இருக்கும் ஒரு மந்திரி பதவி பரிபோகவும் வெகு தூரம் இல்லை.நாம் கௌரவமாக வாழ, இளைஞர்களை நல் வலி படுத்துவோம், நம் பெண்களை 22 வயதுக்குள் திருமணம் செய்ய ஊக்க படுத்து வோம்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகிகள் எங்கு பார்த்தாலும் இருக்கின்றார்கள்–அது நம்மவர்களுக்கு தெரியும் ஆனால் தெரியாது– அத்துடன் துரோகிகளே நம்மவர்களாக இருக்கும் போது என்ன சொல்வது? தமிழர்கக்ளுக்கு சுயமரியாதை என்பது மிக குறைவே. இன்றைய கால தமிழ் பெயர்களை -அது தமிழ் பெயரா ? நம்மவர்களின் தமிழ் பற்றின்மை மிகவும் கேவலம். அத்துடன் தமிழ் நாட்டில் என்ன தமிழ் பேசுகின்றனர்? தற்போது இங்குள்ளோர் தமிழ் என்றால் என்ன என்று நம்மையே கேட்பார்கள் போல் உள்ளது. இன்னும் எவ்வளவோ. பேசுவதற்க்கே கூசுகிறது.
நீர்தான் Kattabomma லுவோ? தமிழனை எட்டப்பனாக சித்தரித்ததை முதலில் மாற்றி எழுதும்! தமிழன் உப்பை தின்றுவிட்டு தமிழனுக்கே துரோகமா?
எல்லா தமிழ் சார்ந்த இயக்கங்களும் அந்தந்த இயக்கங்களின் வழி ஒரு { பெட்டிசன் } டெலிகிராம் செய்தியை தகவல் துறை அமைச்சுக்கு அனுப்பி குள்ளநரி குமரனை நீக்கச் சொல்லி கோரிக்கை வைப்போம். அதற்க்கு அசைய வில்லை என்றால் குமரனின் உருவ பொம்மையை ஆர்.டி. எம். முன்னாள் எரிப்போம். திங்கள் முதல் நமது டெலிகிராம் தந்தி செய்தியை அனுப்ப தொடங்குவோம்.
டெலிகிராம் வசதி எல்லாம் நின்று போய் பல காலமாகி விட்டது. நமது இயக்கங்கள் ஆர்.டி.எம். – ம் இயக்குனருக்கு வேண்டுகோளை வைத்து தமிழ் மின்னல் எப்.எம். என்று முன்புபோல செயல்படுத்துமாறு வற்புறுத்துவோம். ஒன்றுக்கும் உதவாத ம.இ.க. இளைஞர் படைகளெல்லாம் குண்டர் கும்பல் வேலை செய்யவும், சேலை கட்டிக் கொண்டு சுற்றி வரவும்தான் இலாயிக்கு. ம.இ.க. கலை கலாச்சாரப் பிரிவு என்ன செய்கின்றது?
நேற்றைய 19/9/2015 தமிழக தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் இயக்குனர் செல்வ பாண்டியர் சந்திப்பில் ….நான் இறுதியில் ஒரு தீர்ப்பை சொன்னேன்.
ஒரு வேளை உலகத் தமிழர்களை அனாதைகள் அல்லது அடிமைகள் என்ற பட்டை நாமம் போட்டு உலகத தலைவர்களிடம் தமிழனுக்கு தனி நாடு தனி குடி ஆட்சி ,சுதந்திரம் கேட்டு முறையிட்டால் உலகம் நம்மை திரும்பி பார்க்கும் என்றேன் > ..அதற்கு செல்வ பாண்டியன் அவர்கள்..இது ஒரு நல்ல தீர்வாகவே இருக்கும் என்றார். தலைவர் பிரபாகரன் உலகத்தில் தமிழன் யார் என்று உணர்த்தினார். உலக முழுதும் 120 மில்லியன் தமிழன் மேல் இன்றைய உலகத தலைவர்கள் நாமெல்லாம் இந்தியனின் ஒரு பங்கு என்றே நம்மை குழப்பி விட்டான் “கார்ட் வேல்ட்டும்” தப்பாக வட ஆரியனிடம் வந்தேறியான ஜீவ்ஸ் கலப்பினரிடம் நம்மை ஆய்வு செய்து அவன் சொன்ன பொய்களை நம்பி ஆதித தமிழர்களை அவன் ஆய்வில் எடுத்துக்கொள்ளவே இல்லை.( தமிழினம் தமிழ் மொழி .www , worldblaze போகவும் இதன் ஆய்வுகளை பெர்னாமாவுக்கு முன் வைக்கிறோம் ) இந்தியன் என்ற கலப்பினத்தில் தமிழனை சேர்த்த அவமானம்தான் தமிழனை இந்த உலகத தலைவர்கள் தனித்து பார்க்கவில்லை. ஆக மீண்டு அடிமை அல்லது அநாதை தமிழனாக உரிமை கேற்க வேண்டும் என்ற உண்மை நிலையை சொன்னேன். தமிழன் செல்வ பாண்டியன் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவண் என்ற இயக்கம் வைத்து இளையர்களுக்கு தமிழன் மீதான திருப்பத்தை தருகிறார். ஜாதி சமுகத்தில் சாகும் இவர்களை “தமிழன் இன சமுகத்தில்” இணையுங்கள் என்ற கொள்கையும் நமக்கு தமிழர் குரலுக்கு இணையான மாற்றமாக உள்ளது. “உலகத் தமிழன் அடிமை ,அநாதை?” என்ற பகிரங்க வாக்களிப்புக்கு இன மான தமிழர்களை தேடுவோம். நவீன இலக்கியம் உதவுமா என்றும் கேற்கிறேன். மன்னிக்க வேண்டாம். இவன் கொஞ்சம் சிக்கலான முரட்டுத தமிழன், மற்றவை பிறகு. நன்றி.
மின் டெலிக்ரம் மீண்டும் உள்ளது! whatsapp போலேவே Telegram தேடுங்கள் கிடைக்கும் Play Store இல்..
செம்பருத்தி இணையம்கூட இந்த செய்தியை அறியவில்லை !!
தோழர் பொன் ரங்கன் பதிவின் மூலமாக அறியக்கிடைத்தது ..
இன்றைய நண்பன் நாளிதழில் முன்பக்க செய்தியாக வெளியாகி உள்ளது .. அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் …
பல தமிழன் பத்திரிக்கை நடத்துறான் தன் சுய விளம்பரத்துக்கும் அரசியல்வாதிக்கு பல்லக்கு துக்குவதட்கும் ..சாதிசங்க விளம்பரம் !! மத வியாபாரிகளுக்கு மார்கெட்டிங் சேவைக்காகவும் நடத்திகிட்டு இருக்கிறார்கள் !! பங்காரு நாயுக்கருக்கு அடிமையாகிட்டார் கொடை வள்ளல் தமிழன் ! பத்திரிக்கை விளம்பரங்களை பாருங்க சோசியம் மற்றும் பொருட்கள் விளம்பரம் ஆங்கில வார்த்தை தமிழ் எழுத்து !!
மொதலாளி நீங்க ஒரு கொடை வள்ளல் ..நம்ப குழந்தைங்க கல்விக்காக அள்ளி கொடுக்கிறிர்கள் தமிழ் நாளிதழ்களில் பார்க்கிறோம்!! தமிழர் சமயத்தையும் தமிழையும் அளிக்க நினைக்கும் பகைவர்களுக்கு பகைவர்களுக்கு துணைபோகாதீர்கள் ஐயா …
தலைமை ஆசிரியர் பெரிய சாமியிடம் மொழி சமய விசயத்தில் கொஞ்சம் கவனமெடுக்க சொல்லுங்கள் ..
சாதாரன மனிதன் பங்காரு நாயக்கர். அவருகால போய்கழுவிட்டு கற்ற அறிவார்ந்த ஒரு தமிழனுக்கு அழகில்லை ! ஏனய்யா ஒன்னு கேட்க்கிறேன் உர்ல சாமியாருங்க அற்புதங்களை செய்ராணுவ லிங்கம் எடுகிராணுவ இன்னொருத்தன் ஐ எ எஸ் அதிகாரி அல்லோலுயா சாமியாரும்கூட செத்துப்போன பிணத்தை உயிர்பிப்பானாம் !!அவனுக்கும் ஒருகூட்டம் !! ஏன்டா பல கோடி ஆளுங்க ஒருவேள ஆகாரம் கிடைக்கிறதே பெரிய விசயமாம் !
மொத்த இந்தியர்களில் பாதிக்குமேல் கழிப்பறை வசதி இல்லையாம் .. நகரங்களில்கூட பொது கழிப்பறைகள் மிகவும் குறைவு .. சென்னை உட்பட .. லிங்கம் வாயிலிருந்து வரவைக்கிறவன் பொணத்த உயிர்பிக்கிற கபோதிங்க உங்க வித்தைய காம்பிச்சு கழிப்பறை இல்லாத குறையை நிவர்த்தி செநியுங்க களிசடைங்களா.. இவனுங்களையும் நம்பிகிட்டு அலைரானுங்க அவனுங்களா சொல்லணும் ..
அட தமிழ் முட்டாள் …… முதலில் இந்த குமரன் பிறப்பால் தமிழனா என கண்டு பிடியுங்கள் ,பிறகு அவனை கலட்டி விட என்ன வழி என யோசியுங்கள் . . பிறப்பால் தமிழனுக்குத்தான் தமிழ் உணர்வு நிச்சயமாக இருக்கும் . கருணாநிதி போன்ற தெலுங்கு வடுகனுக்கோ அல்லது எம் ஜி ஆர் போன்ற மலையாளதானுக்கோ நிச்சயமாக வராது .ஆனால் தமிழை வைத்து நன்றாக சம்பாதிப்பார்கள் .
என்னாப்பா சொல்றீங்க! குமரன் என்றாலே அவன் ஒரு மலையாளி என்பது கூடவா தெரியாது? பல்கலைகழகத்தில் தமிழை அழித்தவனும் மலையாள குமரன் தான், இதுவும் மலையாள குமரன் தான். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தமிழாலேயே பிழைப்பு நடத்தியவர்கள் இப்படி செய்கிறார்களே என்னும் வருத்தம் தான். ஆனாலும் இப்படி எல்லாரையும் குற்றம் சொல்லுவது சரியல்ல. தமிழனைப்பற்றி நமக்குத் தெரியும். ஆனால் மலையாளிகள் பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளுக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.அதனால் தான் தமிழ் என்று வருகின்ற இடத்தில் எல்லாம் அவர்கள் இருக்கிறார்கள். யாரை நொந்து கொள்ள?
ஹமீது பிலசான் உங்க அம்மா உன்னை பிலசானுக்கா பெத்தா? தமிழனை இப்படி ஏச உன் நாவை அறுப்பேன். நீ தான் கண்டிபிடித்து அவன் ….அறுத்தெடு !
இந்தியாவில் மத்திய அரசில் ,அதிகமான மலையாளிகள் வேலை செய்கிறார்கள் ,காரணம் அவர்கள், தாய் மொழி ,ஹிந்தி கற்கிறார்கள் .ஆனால் தமிழர்கள் ,தமிழையும் பிற இந்திய மொழியும் படிக்காமல் ,தமிழனை மற்றும் பிர இந்தியனையும் ,நாயைவிட கேவலமாக நடத்திய ஆங்கிலேயனை அகல் விளக்கேற்றி வணக்குவர் .ஆங்கிலம் அவர்களுக்கு தாய் மொழி .
அதெப்படி கையில் ஆதாரப்பூர்வமான கணக்கெடுப்பு இல்லாமல் இன்னவர் இந்திய மத்திய அரசாங்கத்தில் அதிகாரிகளாக அதிகமாக உள்ளனர் என்று கூற முடியும்? தமிழர் அவ்வாறு இல்லை என்று எப்படி சொல்கின்றீர்கள்?. ஆதாரப்பூர்வமான தகவல்களை சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை முறைப்படி இங்கே தகவல்களாக கொடுத்துப் பேசுவது நல்லது. இல்லையேல், திலிப் 2 சொன்ன மாதிரி வாயாலேயே சுவருக்குச் சாயம் பூசுவது போலாகி விடும். தமிழருக்கு தமிழ் தாய் மொழி. ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தி மூன்றாவது மொழி. ஆங்கிலப் புலமையால்தான் தமிழரை இன்றும் வடக்கே உள்ளவர்கள் தலை நிமிர்ந்துப் பார்க்கின்றனர். நாங்கள் பன்மொழிகளிலும் சதிராடுவோம். தமிழர் பன்மொழிப் புலவர்கள்.
ஹமீது பிலசான் உங்க அம்மா உன்னை பிலசானுக்கா பெத்தா? தமிழனை இப்படி ஏச உன் நாவை அறுப்பேன். நீ தான் கண்டிபிடித்து அவன் ….அறுத்தெடு !
பொன் ரங்கன் என்ற புண்ணாக்கு ரங்கன் அவர்களே ,உங்களை ஒரு சிறந்த தமிழ் ஆர்வலர் என்றும் ,நல்ல எழுத்தாளர் என்றும் தவறாக எண்ணி விட்டேன் .தலை நகரில் சில தமிழ் ஆர்வலர்களிடம் விசாரித்த போதுதான் தெரிந்தது நீர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி மற்றும் குமரனை கேள்வி கேட்க்க துணிவில்லாத என் பிறப்பை பற்றி பேசும் புறம்போக்கு என்று . புண்ணாக்கு ரங்கா என் தாய் என்னை யாருக்கு பெற்றால் என்பது ஒரு புறம் இருக்கட்டும் . முதலில் உன் பிறப்பை பற்றி உன் தாயிடம் நன்கு விசாரித்து கொள் .ஆனால் நீர் நிச்சயமாக தன்மானமுள்ள தமிழ் உணர்வாளன் கிடையாது என்பதை , நீர் சமீபத்தில் ஜோகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீர் கலந்து கொண்ட அன்றே தெரிந்து கொண்டேன் .நான் பெலாச்சானை புனை பெயராக வைத்துகொண்டது ,அது நம் நாட்டின் தேசிய உணவே யன்றி வேறு ஒரு காரணமும் இல்லை .நான் தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்த தன்மானமுள்ள தமிழன் தான் .ஆசிரியர் அவர்களே தயவு செய்து என் கருத்தினை திருத்தம் செய்ய வேண்டாம் ,என் கருத்துக்கு நானே பொறுப்பு .
ஆபிரகாம் தேராஹ் நீங்கள் தற்போது எந்த காலத்தில் இருகிறீர்கள் ? , தற்போதைய காலங்களில் மலையாளிகள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப கேவலமாக நினைக்கும் காலமிது . ஆனால் தமிழன் / தமிழ் மொழி யின் வழி(பணம் பதவி ,பட்டம் ) சம்பாதிக்க வழி ஏற்பட்டால் உடனே தம்மை சந்தர்ப்பத்திற்கு எதுவாக மாற்றிக் கொள்வார்கள் .
Malaysia இந்தியர்களில் 86 % தமிழர்கள் ,ஆனால் 14 % பிற மொழி வடுகர்கள் தமிழனை முட்டாளாக்குகிறான் என்றால் ! தமிழன் யார் ? புண்ணாக்கு ரங்கன் ,பதில் சொல்லப்பா ?
தமிழை ,எழுத /படிக்க தெரியாத தமிழன் கோடியை தாண்டும் தேனீ. டமில் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் யெரிம்.
தேனீ சார் தமிழர்களில் எத்தனை பேர் அஷ்டஅவதானிகள் உள்ளனர் என்றுசொல்ல முடியுமா ?
என்ன பெயரை மாதிடான்களா ? நான் மின்னல் FM கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது . முன்பு எல்லாம் நல்ல நல்ல நிகழ்சிகள் இருக்கும் பழைய திரைப்படம் திங்கள் அன்று புது திரைப்படம் செவ்வாய் அன்று குழந்தைகள் நிகழ்ச்சி , நாதஸ்வரம் நிகழ்ச்சி , மருத்துவ நிகழ்ச்சி இன்னும் பல அனால் இப்போ ???? நான் சொல்வது 1990 களில்
மின்னல் எப் எம் , ஏற்கனவே மின்னல் தாக்கிய எப் எம் .
மலாயன் மாமா இப்போ இந்தியன் வானொலில குருவி யோசியம் ராசிகல்லு விற்பனை இப்படி ஏகபட்ட புதுமை !!
வியாபர விளம்பரத்தில ஒருயால்ரா அள்ளிவிட்டான் அந்தாளு எப்போ ரிட்டயர் ஆவாரோ ஏக இறைவனுக்குத்தான் வெளிச்சம் !
வானொலியில் ராசிகல்லு வியாபாரி மூடநம்பிக்கைய வளர்கிறான் ..
ரட்சை வாங்கி அணிந்தால் பரிட்சையில் சித்திபெறலாம் !!!!
நம்பின வாங்குறவனுக்கு கோவிந்தா கோவிந்தா ….
ஐயாமார்களே தாய்மொழி அறியாத தமிழர்கள் கோடி இருக்கலாம். இது தமிழர்களுக்கு மட்டும் உரிய சாபக்கேடு இல்லை. பிற இனத்தவரும் அவ்வாறே. வாழ்க்கை வசதி ஏற்றம் கண்டவுடன் தாய்மொழி அனைவருக்கும் கசக்கத்தான் செய்கின்றது. தாய்மொழியைப் பேணி வளர்ப்பது பெரும்பாலும் பொருளாதார ரீதியில் நடுத்தரத்திலும், கீழ்மட்டத்திலும் உள்ளவர்களே. பணக்காரர்களில் பெரும்பாலோர் தாய் மொழின்னா அதை எள்ளி நகையாடுவதும் உதாசீனப் படுத்துவம் பழக்கமாகிப் போய் விட்டது. இது தமிழருக்கு மட்டும் உரிய பண்பு அல்ல தெலுங்கு மற்றும் மலையாள வம்சாவளி மக்களிடமும் இதே நிலைதான். இன்று மலாய்க்காரர்களிடமும் இந்த நிலை வந்து கொண்டிருக்கின்றது. நாம் தமிழர் முடிந்த அளவுக்கு தமிழை வளர்க்கப் பாடுபடுவது நமது தார்மீக கடமையாகும். இதில் செம்பருத்தி தமிழுக்குச் செய்யும் தொண்டு அளப்பரியது. ஐயா காத்தையா மற்றும் அவர்தம் குழுவினர் நீடு வாழ வாழ்த்துகின்றேன்.
பி. பானுமதி ஒரு தமிழ் படத்தில் பாடலைப் பாடிக் கொண்டு பூச்சொரிந்த மலர்களையும் எண்ணிக் கொண்டே இறுதியில் பதில் சொல்லுவார். அம்மையார் தெலுங்கு வம்சாவளியானாலும் அவர் நடித்த பல தமிழ் படங்கள் எம் மனதைப் பறித்தவை. இப்படி ஒரே நேரத்தில் 8 கலைகளை ஒரு சேர செய்ய வல்லவர் நான் இல்லை!. வேறு யாரைவது தேடிப் பாருங்கள்.
பிளச்சான் என் தாய்மை கற்புடையவள் என்பதால் என் உண்மை பெயரில் எழுதுகிறேன், உன்னை போன்று கலப்பில் நானில்லை. ஜோகூரில் என் உரைக்கு கேள்வி கேட்டிருந்தால் நல்ல தாய்க்கு மதிபளிப்பு செய்திருப்பேன் ..இனி அவுத்துபோட்டு ஓடும் எலிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை விசாரித்த உன் நாய்களுக்கு நன்றி.
பொன் ரங்கன், இங்குப் பொதுவானக் கருத்துக்கள் சொல்லுகின்ற இடம். பலர் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாய் தந்தையரைப் பற்றியெல்லாம் விமர்சிக்கிற இடம் இல்லை. உங்களுக்கு அது சர்வ சாதராணமாக வருகிறது. பல இயக்கங்களுக்குத் தலைவர் என்று நீங்களே போட்டுக் கொள்ளுகிறீர்கள். கடைசியாக தமிழர்களுக்கு என்று புதிதாக அரசியல் கட்சி அமைத்து இந்த நாட்டையே நடுங்க வைக்கப் போகிறேன் என்றீர்கள். நடந்தது என்னவோ மான்யம் வாங்குகின்ற ஒரு சாதாரண தமிழர் அமைப்பு. மின்னல் வானொலி பற்றி ஒரு சாதாரண வாசகன் எழுதுவது போல ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள். அன்று ஆஸ்ட்ரோவுடன் பேச்சுவார்த்தை என்று துள்ளிக் குதித்தீர்கள். ஏன் மின்னல் வானொலியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியவில்லையா? ஒன்று மட்டும் புரிகிறது. உங்களால் எதுவும் ஆகாது!
தயவு செய்து சண்டை போடுவதை விடுங்கள்……இப்போது என்னசெய்யலாம் என்பதை… திட்டமிட்டு செய்யல்படுதுங்கள்… தமிழுலகம் ….உங்களை வாழ்த்தும் ……வரலாற்றில் உங்கள் பெயர்……இருக்கும் …வணக்கம் .
எனக்கு புத்திசொல்ல இரண்டு பேருக்கு மட்டும் உரிமை உண்டு, ஒருவர் டாக்டர் ஜெயபாரதி இரண்டாமவர் டாக்டர் கலிய பெருமாள் அவர்கள். இருவரும் இன்றில்லை பெங்களூர் தமிழின ஆய்வாளர் ஐயா குணா அவர்கள். என் அப்பன் வைத்த பேரில் எழுதுகிறேன். கலப்பில் உள்ளவர்கள் என் களத்துக்கு வர வேண்டாம். என் கருத்தில் விவாதம் வையுங்கள். என் குணம் அது ஒரு எமன். எனக்கே தெரியாது என்னை எப்போ புடுங்கும் என்று. ஒருவர் தமிழா- தமிழ் முட்டாள் என்கிரறார். தமிழில் எழுதும் அப்ரகாம் தேராஹ் முட்டாள் என்றால் தமிழில் எழுத வேண்டாம். குமரனுக்கு பக்க வாதம் உனக்கு என்ன மூளை வீக்கமா ?
ஆபிரகாம் ,சரியாக சொன்னீர்கள் , கருத்துக்களை எழுதும் பொது ,மற்ற வாசகர்களின் தாய் தந்தையை இழுத்து ஏளனம் செய்யும் பொன் ரங்கன்…………………………
தமிழனுக்கு எங்கு எதற்கு ரோசம் வரவேண்டுமோ அதிலே வரவிலையே…
ஐயா, இப்பொழுது பிரச்னை என்ன ? மின்னல் fm மில் தமிழ் ஒலியலை இந்திய ஒலியலையாய் மாற்றப்பட்டுள்ளது . நாம் எவ்வாறு மீண்டும் தமிழ் ஒலியலையாக மாற்றபோகிறோம் ?
தயவு செய்து இதை மட்டும் சிந்திப்போமே !! இங்கு யாரேனும் தமிழ் இயக்கத்திற்கு தலைமை வகிக்கிரீர்களா ? இருந்தால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசலாமே ……….யாரேனும்