நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் அவுஸ்திரேலிய பிரதமர்: புதிய பிரதமராக பதவியேற்கிறார் மால்கம்

malcolm_001அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் நடைப்பெற்று வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய பிரதமரான டோனி அப்பாட் தோல்வியை தழுவியுள்ளதால் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பிரதமர் டோனி அப்பாட்டிற்கு எதிரான அரசியல் சூழல் நிகழ்ந்து வந்த நிலையில், இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து கேன்பரா நகரில் நடைப்பெற்ற வாக்கெடுப்பில் தற்போதைய பிரதமாரான டோனி அப்பாட்டிற்கு 44 வாக்குகளும், சுதந்திர கட்சியை சேர்ந்த மால்கம் டர்ன்புல்லிற்கு 54 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அமைச்சரவையில் டோனி அப்பாட் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியுள்ளதால், அவரது பிரதமர் பதவி பறிப்போயுள்ளது.

பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு துணை தலைவரான ஜுலியா பிஷப் தற்போதும் அதே பதவியில் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவியை இழந்துள்ள டோனி அப்பாட், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுனருக்கு கடிதம் அனுப்பிய பிறகு, மால்கம் டர்ன்புல் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-http://world.lankasri.com