பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளில் 400 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள்: பிரதமருக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை

david_cameron_002பிரித்தானிய நாட்டிற்குள் அகதிகள் என்ற போர்வையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக பிரதமர் கமெரூனிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன், அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக லெபனான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்றைய தினம் பிரதமரை வரவேற்று பேசிய லெபனான் நாட்டு கல்வி துறை அமைச்சரான எலியாஸ் போசாப் இவ்வாறு பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் அகதிகள் என்ற போர்வையில் நுழையும் ஒவ்வொரு 100 சிரிய நாட்டு நபர்களில் 2 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவிற்குள் நுழையும் 20,000 அகதிகளில் 400 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் வழியாக வரும் இந்த தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும்.

’ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்கூட்டிய எடுப்பது மிக அவசியமாகும். ஏனெனில், ஐ.எஸ் தீவிரவாதிகள் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஐரோப்பா நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்வதற்கு கூட வழியில்லாமல் வறுமையில் இருக்கும் மக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் எளிதில் அணுகி தங்களுடைய தாக்குதல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

எனவே பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என கல்வி துறை அமைச்சர் எலியாஸ் போசாப் தெரிவித்துள்ளார்.

லெபனான் நாட்டின் வளர்ச்சிக்காக பிரித்தானிய அரசு வழங்கிய 1 பில்லியன் பவுண்ட் நிதியுதவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்வையிட பிரதமர் கமெரூன் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com