பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஒரு புதிய கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்க மற்ற எதிரணித் தலைவர்கள் மூவரை அடுத்த செவ்வாய்க்கிழமை வட்டமேசை பேச்சுகளுக்கு அழைத்திருக்கிறார்.
“ஒரு எதிரணித் தலைவர் என்ற முறையில் மற்ற எதிரணித் தலைவர்களுடன் கூடிப் பேசுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன்.
“இறை அருளால், இப்பேச்சுகளின்வழி மக்கள் விரும்புவதுபோல் ஒரு புதிய கூட்டணி அமையலாம். அதற்கான வலுவான கடப்பாடு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்”, என்றவர் அழைப்பிதழில் தெரிவித்துள்ளார்.
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அமானா தலைவர் முகம்மட் சாபு, பல என்ஜிஓ தலைவர்கள்,, சைபுடின் அப்துல்லா, சைமல் சிபாவுன் போன்ற பெருமக்கள் அகியோருக்கு வட்டமேசைப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்தத் தேர்தலில் மலாய்க்காரர்கள் அம்னோவை எட்டி உதைக்கப் போவது நிச்சயம். அதனால்தான் பசுத் தோல் போர்த்திய புலியான நிலா கட்சி புதிய கூட்டணி பக்கம் தாவப் பார்க்குது. நிலா கட்சி அம்னோ கட்சியுடன் முன் கதவு அல்லது பின் கதவு வழியாகவோ கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டால் அந்த நிலா கட்சியும் மண்ணைக் கவ்வும். நிலா கட்சியை இப்பொழுது ஒதுக்கினால் தேர்தல் காலத்தில் அது கூட்டணி என்று மக்கள் நீதிக் கட்சியின் வாலைப் பிடிக்க வரும் பொழுது தொகுதி பங்கீடு மக்கள் நீதிக் கட்சிக்கு சாதகமாக இருக்கும். சிலாங்கூர் மாநிலத்தை மக்கள் நீதிக் கட்சி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இம்முறை சிலாங்கூரில் நிலா கட்சியை விட மக்கள் நீதிக் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டும். இல்லையேல் தேர்தல் முடிந்த பிறகு நிலா கட்சியும் அம்னோ கட்சியும் இசைந்து சிலாங்கூரில் ஆட்சி அமைப்பது தவிர்க்க முடியாததாகி விடும். வான் அசிசாவுக்கு அரசியல் சாணக்கியம் இருக்கின்றதா அல்லது இவரும் நிலா கட்சியை நம்பி நட்டாற்றில் விழுவாரா என்று பார்ப்போம்.
இன்னுமா மலாய் காரர்கள் பகாதானை நம்புகின்றனர் என்று நினைகிரிர்கள்????? அவர்கள் பகாதானை விட்டு சென்று பல மாதங்கள் ஆகி விட்டது அதற்கு அதாரம் சிகப்பு சட்டை பேரணிதான் இனி பக்தனை பொருள் காட்சியத்தில் தான் வைக்க வேணும் . பாஸ்சும் UMNO உம் குட்டனி சேர்வது உறுதி இனி 1000 தேர்தல்கள் வந்தாலும் பகாதானால் வெற்றி பெற இயலாது . பகதானின் இந்த நிலைமைக்கு DAP தான் காரணம்
சும்மா ஜ.செ.க. – யை நோண்டிகிட்டு இருக்க வேண்டாம். அந்த நிலா கட்சித் தலைவன் பின் புற கதவு வழியாக ஊழலின் ஊற்றுக் கண் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு மக்கள் கூட்டணியின் முதுகில் குத்தியதுதான் புதிய மக்கள் கூட்டணி ஏற்படுவதற்கான காரணம். பணம் கொடுத்து பந்தோபஸ்து கொடுத்த சிகப்புச் சட்டைக்கு 30,000 பேர் என்றால் அங்கே வராமால் போன மலாய்க்காரர்கள் எத்துனை கோடி?. அமைதியாக இருக்கும் பெரும்பான்மை மலாய்க்காரர்கள் அமீனோ கட்சிக்கு அடுத்த தேர்தலில் ஆப்பு அடிக்கவிருக்கின்றார்கள். எதற்கும் அமீனோ கட்சிக்கு ஒரு சவப்பெட்டியை தயார் செய்து வைப்பது நல்லது. அடுத்த தேர்தலுக்குப் பின் சட்டி பொட்டி கட்டி மாமா வீட்டுக்கு அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்.
அம்மணி! எல்லாக் கூட்டணிகளும் சேர்ந்து விலைவாசிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது வட்டமேசை மாநாடு போடுங்கள்!
கெராக்கான் பாருவுடன் சீரும் ஆர்வம் பி.எஸ்., ஹின்றாப்புடன் இல்லை ஈன்