பெண் பொலிசை சரமாரியாக தாக்கிய தீவிரவாதி: சுட்டு வீழ்த்திய ஜேர்மன் பொலிசார்

terrorist_attack_001ஜேர்மனியில் பெண் பொலிஸ் அதிகாரி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் ரோந்து பணியின் போது பெண் பொலிஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் தாக்க தொடங்கினர்.

தன்னிடம் இருந்த கத்தியால் பெண் பொலிசின் கழுத்து பகுதியிலும் குத்தியுள்ளார்.

எனவே சக பொலிஸ் அதிகாரி அந்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்டது ஈராக்கை சேர்ந்த ரபிக் என்பவர் ஆவர்.

இவர் கடந்த 2004ம் ஆண்டு ஜேர்மனி வந்த ஈராக் பிரதமரை கொல்ல முயன்ற குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் விடுதலையான இவருக்கு ஜேர்மனியில் தங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய வேறு அமைப்பில் உறுப்பினராக இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com