பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் தோழரும் இன்னாள் வைரியுமான கேஎஸ் நல்ல கருப்பன் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாளை தேவான் நெகாராவில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஊடக் குறிப்பில் அந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.
பெரித்தா ஹரியான் தகவல் ஒன்று அதனைத் தெரிவித்தது.