சிரியாவில் அரசுப் படையைச் சேர்ந்த 45 போர்க் கைதிகளை அல்-காய்தா பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:
சிரியாவின் வடமேற்குப் பகுதியில், தங்களிடம் போர் கைதிகளாக இருந்த 45 அரசுப் படை வீரர்கள், அந்த நாட்டுக்கான அல்-காய்தா பிரிவான நூஸ்ரா முன்னணி அமைப்பினரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏற்கெனவே, அபு ஸýகோர் விமான தளத்தில் 56 சிரியா படையினரை நூஸ்ரா முன்னணிப் பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர் என்றார் அவர்.
சிரியாவில் அரசுப் படையினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்வது வழக்கமான ஒன்று.
எனினும், நூஸ்ரா முன்னணி அமைப்பினர் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அரசுப் படையினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
-http://www.dinamani.com