பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி விவகாரத்தை மூடிமறைக்க போலீசை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பாஸ் பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறியிருப்பதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார்.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்தார் என முன்னாள் அம்னோ உறுப்பினர் கைருடின் அபு ஹசானை போலீஸ் கைது செய்ததை அடுத்து மாபுஸ் அப்படிக் கூறினார்.
மலேசியாவில் விசாரணை நடைபெறும் வேளையில் கைருடின் பல வெளிநாடுகளில் 1எம்டிபி பற்றிப் புகார் செய்தார். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார் என காலிட் கூறினார்.
கைருடின் உள்நாட்டு நிறுவனங்கள் அவற்றின் பணியைச் செய்வதற்கு இடமளித்திருக்க வேண்டும். உலகம் சுற்றி புகார்களைப் பதிவுசெய்து “மலேசியாவின்மீது அனைத்துலக அழுத்தம் பெருக” வழிகோலியது தப்பு என்றார்.
“இது நாட்டின் பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் நிலைகுலைய வைக்கும் ஒரு ஒருவகை சதி”, என்று காலிட் ஓர் அறிக்கையில் கூறினார்.
இவனைப்போன்ற அறிவிலிகள் தான் இந்த நாட்டை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றான்கள்- இருந்தும் யாருக்கு என்ன ? சிந்திக்கும் திறமை தேவை இல்லையே.
சும்மா! நீங்கள் ஒரு சிட்டுக்குருவி தானே!
பதவியில் இருப்போர் சட்டத்தை மீறும் போது சட்டமே வளைந்து கொடுக்கின்றது. அரசியல் பலம் இல்லாதோருக்கு சட்டம் வளைத்து வளைத்து அடிக்கின்றது. என்னடா நீதி, நியாயம் இது?. உங்க புத்தகத்தில் சட்டம் ஓர் இருட்டரையோ?
”அதில் என்ன சந்தேகம் மக்கள் பணத்தை கொல்லையடிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்து விஷ்வாசமுல்ல ஞமலிகள் தானடா நிங்கள்.
முதலில் போலிஸ் தலைவர் என்பவரை நாட்டு மக்கள் மதிக்க தெரிந்தவர்களாக நடந்துகொள்ளவேண்டும் , படிப்பு,சட்டம்,நேர்மை,ஆங்கில புலமை,இலஞ்சம் பெறாத, தனது,தன் அமைப்பை சேர்ந்தவர்களும் இலஞ்சத்திற்கு வாய் பிளக்காத, நடுநிலை உள்ளவர்களாக இருக்கவேண்டும்,மதம் பாராத நேர்மையான வழியில் நாடு காக்க வேண்டும் . போலிஸ் துறைக்காக உள்ள உடையை அணிந்து இருத்தல் வேண்டும் . உங்களில் உடையை கண்டு உலகம் மதிக்கவேண்டும் , தலையில் அணிய பட்ட குல்லாவை கண்டால் எவனும் மதிக்கமாட்டான் . அதனை முதலில் சரிசெய்யவும் . அதன்பின் சகலமாக பேச,குறிப்பாக ஆங்கிலதில் பேச கற்றுக்கொள்ளவும் , அப்பா இனி …அப்பா இனி … அப்பா இனி என பதில் சொல்ல தெரியாமல் இழுத்து பேசுவதை தவிர்க்கவும் .
உங்களில் மதிப்பு கூடும் , அனைவரும் மதிப்பர், அவற்றோடு ‘எனக்கு தோசை சாப்பிட ஆசை , என்வீட்டு வாசலிலும் வந்து தோசை சுடுங்கள் என அறிவில்லாமல் பேசியதை உலகம் அறியும். இந்த மாதிரியான அறிவின்றி பேசுவதை நிறுத்தி மதம் பாராமல் நேர்மையாக நடந்தால் அனைவரும் மதிப்பார்கள் . அது என்று நடந்தேறும் . நன்று .
இருனூற்று அறுபது கோடி வெள்ளி கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.திசை திருப்ப வேண்டாம்.
உன்னை பற்றி நாட்டை பற்றி மக்கள் சொல்லட்டும் நீ பேசாதே .