இலங்கையை மையப்படுத்தி ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் பரப்பரப்படைந்துள்ள வேளை, இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானமொன்று பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்மக்களது நீதிக்கு உறுதுணையான சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை ஐ.நா மனித உரிமைச்சபையினை கோருவதாக (PROYECTO DE DECLARACION: QUE EXHORTA AL PODER EJECUTIVO A APOYAR EL PEDIDO DE LA COMUNIDAD TAMIL DE SRI LANKA AL CONSEJO DE DERECHOS HUMANOS DE LAS NACIONES UNIDAS A REALIZAR UNA INVESTIGACIÓN INTERNACIONAL E IMPARCIAL EN SRI LANKA SOBRE LOS HECHOS OCURRIDOS A LA COMUNIDAD TAMIL) José María Ibáñez அவர்களினால் சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
http://www.diputados.gov.py/ww2/?pagina=noticia&id=13844
சமீபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தலைமையில் புலம்பெயர் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று பரகுவே நாட்டுக்கு சென்று பரகுவே அரச உயர்மட்டச் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.
இந்நிiயில், பரகுவே அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் ஈழத்தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்த்துள்ளதோடு, பரகுவேயில் உள்ள பல மனித உரிமைவாதிகள் எமக்காக குரல் கொடுக்க தொடங்கியிருப்பது, புதிய நம்பிக்கைகளை நமக்கு அளிப்பதாக, நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மாணிக்கவாசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
பரகுவேயின் பிரபல மனித உரிமைவாதியான María Stella Cáceres அவர்கள், ஈழத்தமிழ் மக்களது நீதிக்கான போராட்டத்தில் தன்னையும் தற்போது இணைத்துள்ளதோடு, அதற்கான குரலியினையும் பரகுவே ஊடகங்களில் வெளிப்படுத்துகின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
-http://www.tamilwin.com
பராகுவே நாட்டுக்கு உலக தமிழர் சார்பில் நன்றிகள் !
http://www.tamilwin.com/show-RUmtyJRXSVir6H.html
A few months ago I stumbled upon a beautiful book in a used book It’s called "Heap O’ Livin’" by Edgar Guest, and it was published in the early 20th century
மட ஒபாமா நம்முடைய காலை வாரி விட்டு விட்டான் அதிலும் பிரிட்டன் நம்முடைய முதுகில் குத்திவிட்டது. நாம் என்ன பேசினாலும் நம்மவர்களில்-குறிப்பாக தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு இதை பற்றி தெரியும் -தெரிந்து கொள்ள ஆசை இருக்கும் அக்கறை இருக்கும்>?
நாம் தான் இனப்பற்று இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பெருந்தன்மையுடன் பேசுகிறோமே? என்ன – மற்றவர்களுக்கு அதைப்பற்றி எல்லாம் சிறிது அளவும் அக்கறை கிடையாது,.உலகில் உள்ள அனைவரும் இன துவேசம் இல்லாமல் இருந்தால் நாமும் இருக்கலாம். அப்படியா இருக்கிறது? அதிலும் மதம் பலரை மதம் பிடிக்க வைத்துள்ளது– அதனால் உலகமே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் ஐக்கியநாட்டு மன்றம் தூங்கி கொண்டிருக்கின்றது–