புடினுடன் நேருக்கு நேராக மோதும் ஒபாமா: உக்ரையின், சிரியா விவகாரம் குறித்து விவாதம் நடத்தவும் திட்டம்

obama_putin_001ஐ.நா. சபையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது.

இரு நாடுகளும் தங்களை வல்லரசாக காட்டிக்கொள்வதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகின்றன.

இதன் காரணமாக இரு நாடுகளும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் வரும் திங்கள்கிழமை ஐ.நா. சபையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ரஷ்யா அதிபர் புடின் பேசவுள்ளார்.

அவரை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து சிரியா, உக்ரையின் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் இந்த சந்திப்பை உறுதி செய்துள்ளது. இந்த சந்திப்பின் போது உக்ரையின் விவகாரம் குறித்து ஒபாமா கேள்வி எழுப்பக்கூடும் என்று கூறப்படுகிறது

மேலும் சிரியாவுக்கு ரஷ்யா ஆயுத உதவி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே இது குறித்தும் புடினுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com