லுஹான்ஸ் பகுதியில் இருந்து ஐ.நா உறுப்பினர்கள் வெளியேறவேண்டும்: உக்ரைன் பிரிவினைவாதிகள் உத்தரவு

Ethnolingusitic_map_of_ukraineஉக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர சர்வதேச அமைப்பு உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று பிரிவினைவாதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரிவினைவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. உக்ரைன் நாட்டுக்கு உதவுவதாக சில நாட்களுக்கு முன் நேட்டோ கூட்டமைப்பு அறிவித்தது.

இந்நிலையில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ் பகுதியில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள்  நாளைக்குள் வெளியேறவேண்டும் என்றும் பிரிவினைவாதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.

-http://www.dinamani.com