பாங்காக் கோவிலில் குண்டு வைத்தவர் கைது: உறுதி செய்தது பொலிஸ்

bangkok_blast_001பாங்காக்கில் அமைந்திருக்கும் பிரம்மதேவன் கோவிலில் குண்டு வைத்துவிட்டு தப்பிய ஆசாமியை கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸ் உறுதி செய்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள பிரம்மதேவன் கோவிலில் கடந்த மாதம் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கோவிலில் குண்டு வைத்த வெளிநாட்டவரை கைது செய்துவிட்டதாக தாய்லாந்து பொலிஸ் தெரிவித்துள்ளது.

கோவிலில் குண்டு வைத்துவிட்டு தப்பியபோது கண்காணிப்பு கெமராவில் பதிவான மஞ்சள் சட்டை அணிந்த நபர்தான் அவர் என்றும்,

பொலிசாரின் தீவிர விசாரணையில் குண்டு வைத்ததை அவர் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

ஆடம் அல்லது பிலால் முகம்மது என்று கூறப்படும் அவரை, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த மாதம் கைது செய்ததாக தெரிவித்துள்ள தாய்லாந்து பொலிஸ்,

கைது செய்தபின் அந்த நபர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், கோவிலில் குண்டு வைத்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விரைவில் முழுவிபரங்களும் வெளியிடப்படும் எனவும் தாய்லாந்து பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com