”சாதிப்பதற்கு வயது தடை இல்லை”: கின்னஸ் சாதனை படைத்த 105 வயது முதியவர்

oldman_achive_001ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தய விளையாட்டு போட்டியில் 105 வயதான முதியவர் ஒருவர் வெற்றி பெற்று முதன் முதலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த Hidekichi Miyazaki(105) என்ற முதியவர் வேளாண்மை கூட்டுறவு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

இளமை காலம் முதல் தனது உடல் ஆரோக்கியத்தை காப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

முதியவரின் நண்பர்களாக உள்ளவர்கள் எவ்வித சாதனையும் புரியாமல் மரணத்தை சந்திப்பதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபிக்க நினைத்த அவர், ஜாப்பானில் நிகழும் Kyoto Masters என்ற ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

முன்னதாக, 96வது வயதில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றுள்ள அனுபவமும் அவருக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என தீர்மானித்த அவர், தினம்தோறும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக, மழை பெய்யும் நேரங்களில் அதிக அளவில் ஓட்டப்பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, அதனை 42.22 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியானது தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தி நேற்று வெளியாகியுள்ள நிலையில், தன்னுடைய சாதனையை தானே முறியடித்து 100 மீற்றர் தூரத்தை 35 அல்லது 36 வினாடிகளில் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக அந்த முதியவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com