தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடரும் முய்றசியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புனர்வாழ்வு அளிக்கப்படாது புலிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாறு வழக்குத் தொடரும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்டத்தரணிகள் குழுவொன்று தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேவிதமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.
இதன்படி, புனவாழ்வு அளிக்கப்பட்ட 12000 பேர், குமரன் பத்மநாதன், ராம் நகுலன் உள்ளிட்ட உயிருடன் வாழும் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவருக்கு எதிராகவம் வழக்குத் தொடர ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டமை, பொதுமக்களின் உயிர்களை பணயமாக வைத்தல், பலந்தமான அடிப்படையில் சிவிலியன்களை படையில் இணைத்தல், அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி அல்லது குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com