ஆப்கானில் இஸ்லாமிய அரசு பெரும் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்கரில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை பிரகடனம் செய்த குறைந்தபட்சம் 300 போராளிகள் பல போலிஸ் நிலையங்களை தாக்கியுள்ளனர்.

afghan

அந்த மாகாணத்தில் ஏற்கனவே தலிபான்களுடன் மோதிவரும் இஸ்லாமிய அரசினர் நடத்திய வழமைக்கு மாறான ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

ஆப்கான் படையினர் தொடர்ந்து போராடி வந்தாலும், தமது தரப்பில் இருவரை இழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதலாளிகள் 35 பேர் காயமடைந்து அல்லது கொல்லப்பட்டு உள்ளனர்.

அரசாங்க படைகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றில் 51 இஸ்லாமிய அரசு போராளிகள் கொல்லப்பட்ட மறுதினம் இந்த தாக்குதல் நடந்துள்ளதால உள்துறை அமைச்சு பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். -BBC