சீனாவின் தூதர் ஹுவான் ஹுய்காங், விஸ்மா புத்ரா விளக்கம் கேட்பதற்காக தம்மை அழைத்திருப்பதாக நாளேடுகளைப் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகக் கூறினார்.
அவர் பெட்டாலிங் ஸ்திரீட்டுக்கு வருகை மேற்கொண்ட விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதா என்று வினவப்பட்டதற்கு அது ஒரு பிரச்னையே அல்லவென்றும் அவர் நிராகரித்தார்.
“அது எப்போது ஒரு பிரச்னையாக மாறியது?”, என்றவர் ஊடகங்களைத் திருப்பிக் கேட்டார்.
தாம் நல்லெண்ணத்துடன் பெட்டாலிங் ஸ்திரீட்டைச் சுற்றி வந்ததைத் தப்பாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது என்றாரவர்.
“கோலாலும்பூர் பாதுகாப்பானது வளமானது என்பதைச் சீனச் சுற்றுப் பயணிகளுக்கு யதார்த்தமான முறையில் காண்பித்திருக்கிறேன்”.
சீனச் சுற்றுப் பயணிகள் அவர்களின் விடுமுறை நாள்களில் மலேசியச் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹுவாங் கேட்டுக்கொண்டார்.
அம்னோ பத்திரிகையான உத்துசான் மலேசியா, பெட்டாலிங் ஸ்திரீட் பற்றிக் கருத்துரைத்ததற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது சீனாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறியிருப்பது பற்றி அவருடைய கருத்தை அறிய முயன்றதற்கு, “மன்னிக்க வேண்டும். கருத்துரைப்பதற்கு இல்லை”, என்று புன்னகைத்தார்.
சீனவாவது மன்னிப்பு கேட்பதாவது……… அவன் என்ன ம இ க வா? (துணை அமைச்சர் )கன்னத்தில் அறை வாங்கி விட்டு மன்னிப்பு கேட்பதுருக்கு ..
சீன சுற்று பயணிகள் மலேசியாவில் “விபச்சாரம்” செய்வதாக
உத்துசான் மலேசியா கூறுகிறது நீங்கள் “விடுமுறை” சுற்றுலா என்கிறீர்கள்.
இதை “விடுமுறை விபச்சாரம்” என்பதா ? அல்லது “விடுமுறை சுற்றுலா விபச்சாரம்” என்று கூறுவதா ? என்பதை மலேசியாவிற்கான சீன தூதர் , உத்துசான் மலேசியா, அம்னோ அரசாங்கம் ஆகிய தரப்புகள் வட்ட மேசை மாநாடு நடத்தி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்.
இதே சீனனுங்ககிட்ட பணத்தை வாங்கிக் கொண்டு நாட்டிற்குள் சுற்றுலா விபச்சாரிகளை விட்டு விட்டு இப்ப குய்யோ முறோன்னு எதுக்கு இந்த பாழாய்ப் போன உத்துசான்காரன் கத்துறான்? இவன்னுங்க இனமே இலஞ்சம் வாங்கிகிட்டு இவ்வளவையும் செய்கின்றார்கள். அதைப் பற்றி ஒரு வரியும் எழுதாமல் இப்படி ஒரு பத்திரிகை