கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை

khirகூட்டரசு நீதிமன்றம்,  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ  அவரது  ஊழல் வழக்குத்  தீர்ப்புக்கு  எதிராக செய்திருந்த  மேல்முறையீட்டைத் தள்ளுபடி  செய்து  அவருக்கு  ஒராண்டுச்  சிறைத் தண்டனை  விதித்தது.

சிறைத்  தண்டனைக்குப்  பதிலாக  அந்த  50-வயது  பல்  மருத்துவர்  இலவச  பல் சிகிச்சை  அளிப்பதன்வழி  சமூகச்  சேவை  செய்ய  முன்வந்ததையும்  கூட்டரசு  நீதிமன்றம்   ஏற்கவில்லை.

“குற்றம்  கடுமையானதென்றால்  தண்டனை  அதனைப்  பிரதிபலிக்க  வேண்டும்”, என  மலாயா  தலைமை  நீதிபதி  சுல்கிப்ளி  அஹ்மட்  மஹினுடின்  தம்  தீர்ப்பில்  கூறினார்.

சமூகச்  சேவையெல்லாம்  இளம்  குற்றவாளிகளுக்குத்தான்  என்றார்  நீதிபதி  சுல்கிப்ளி.

“இங்கு  சமூகச்  சேவை  போதாது. அவரது செயலால்  அரசுப்  பணியாளர்கள் மீதிருந்த  நம்பிக்கை  குறைந்துள்ளது”, என்றாரவர்.