தீவிரவாத அமைப்பில் சேர மறுத்தவர்களுக்கு அடி உதை! வெளியான வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

kashmir_issues_001ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர மறுத்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரிவாதிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீரை சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்களது அமைப்பில் சேருமாறு அடித்து உதைத்துள்ளனர்.

இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக், முசார்பாத், கில்கிட், கொட்லி போன்ற இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரசு ஒத்துழைக்க கூடாது, மேலும் காஷ்மீர் பிரச்சனையில் சமாதானம் ஏற்படுவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை, இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் ஐ.நாவில் குரல் எழுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும், இதுஒரு தெளிவான போராட்டம் இல்லை, தற்போது இது கூட்டமாகவே கருதப்படுகிறது, ஆனால் பொலிசார் மற்றும் இராணுவவீரர்களும் இவ்வாறான போராட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவேண்டும் எனக்கூறியுள்ளனர்.

ஒரு போராட்டக்காரர் கமெரா முன்னிலையில் கூறியதாவது, மனித உமை விடயத்தில் பாகிஸ்தானை விட அண்டை நாடான இந்தியா சிறந்து விளங்குகிற என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com