அகதிகள் நெருக்கடிக்கு காரணம் என்ன? ஆய்வில் தகவல்

refugee_increase_001சிரியாவில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவது தான் அகதிகள் நெருக்கடிக்கு காரணம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவிற்கு ஏற்பட்டுள்ள அகதிகள் நெருக்கடிக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பலியாவதே காரணம் இந்த ஆய்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் நாளிதழ் தான் இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிரியாவில் அரசுப்படைகள், கிளர்ச்சிப்படைகளின் தாக்கங்களுக்கு இடையே முரண்பாடு மிகவும் கூர்மையாக உள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் பலியான அப்பாவி மக்களில் 23% குழந்தைகள். மாறாக இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதஅ மைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் அதிகமாக உள்ள பகுதிகளில் குழந்தைகள் பலியாகும் விகிதம் 16% ஆகும்.

அரசுப்படைகளின் பிடியில் இருக்கும் பகுதிகளில் வான்வழி தாக்குதல்களில் குழந்தைகள் பலி இல்லை. ஆனால் மற்றவர்களின் பலி விகிதத்தில் இரண்டில் மூன்று பங்கு குண்டுவீச்சுத் தாக்குதலில் ஏற்படுவதே காரணம் ஆகும்.

சிரியாவில் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் குடிமக்கள் சேர்த்து 2011 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை 191,369 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புள்ளிவிவரங்களின் படி 78,769 பலிகளில், 77,646 மரணங்கள் அரசுசாரா கிளர்ச்சிப் படைகள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே ஏற்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில், அரசுப்படைகளின் தாக்குதலில் தான் அதிக குடிமக்கள் பலியாகின்றனர் என்றும் சிரியா போரில் பெரிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பலியாவது தான் அகதிகள் நெருக்கடிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

-http://world.lankasri.com