மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தாத பாக்டீரியா கண்டுபிடிப்பு? ரஷ்ய விஞ்ஞானி பரபரப்பு தகவல்

bacteria_001மனித குலத்திற்கு மரணத்தை ஏற்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் இளமையாக வைத்திருக்கும் வல்லமை படைத்த புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பல்கலைகழகத்தில் Anatoli Brouchkov என்ற விஞ்ஞானி ஒருவர் உறைந்துப்போன பனிகற்கள், மண், பாறைகள் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்யும் துறையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னர், பல மில்லியன் வருடங்களாக உறைந்துபோன நிலையில் இருந்த பனிக்கட்டிகளை ஆராய்ந்து பார்த்தபோது அதற்குள் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த Bacillus F என்ற பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளார்.

இந்த வகை பாக்டீரியா குறித்து ஆராய்ச்சி செய்தபோது, அதற்கு உயிரினங்களை இளமையாகவும் எந்த நோய் தாக்காமல் ஆரோக்கியமாக பாதுகாக்கும் குணநலன்கள் இருப்பதை கண்டறிந்தார்.

பின்னர், இந்த பாக்டீரியாவை எலிகள் மற்றும் பூச்சிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்த்தார்.

விஞ்ஞானி எதிர்பார்த்த விளைவுகளை அந்த பாக்டீரியா ஏற்படுத்தியிருப்பதை அறிந்த அவர், அந்த பாக்டீரியாவை தனது உடலிலேயே செலுத்தி தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பாக்டீரியாவை தன்னுடைய உடலில் செலுத்திய பிறகு, தான் மிகவும் இளமையாகவும் புதிய பலத்துடன் இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு வருடங்களாக தன்னை எந்த நோயிம் தாக்காமல் இருப்பதற்கு இந்த பாக்டீரியா தான் காரணம் என கண்டுபிடித்துள்ளார்.

இருப்பினும், இந்த பாக்டீரியா குறித்தான 100 சதவிகித ஆராய்ச்சி முடிவடையவில்லை. இதனை தனது ஆராய்ச்சி குழுவினர் கூடுதலாக ஆராய்ந்து வருவதாகவும், இந்த பாக்டீரியா எவ்வாறு வயதை அதிகரிக்காமல் இளமையாக பாதுகாக்க முடிகிறது என்ற கேள்விக்கு அடுத்தடுத்த ஆராய்ச்சியில் பதில் தெரியவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com