இந்தியாவின் பங்களிப்பும் உதவிகளும் தமிழர்களுக்கு தேவை!- அகிம்சை தின விழாவில் இரா.சம்பந்தன்

kanthi-day07மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டியதாக இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் யாழ்.இந்துக் கல்லூரியில் கொண்டாடப்பட்ட அகிம்சை தின நிகழ்வில் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றிருந்தார்.

இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் நடராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் மாலை 4மணிக்கு யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையில் குறிப்பிடுகையில்,

தந்தை செல்வநாயகம் இடத்தில் இருந்து நாம் உண்மை, சத்தியம், நேர்மை, ஒழுக்கம் என்ற பல விடயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அவற்றை கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அவற்றை பின்பற்றவும் வேண்டும்.

இந்நிலையில் அவ்வாறான தலைவர்கள் மத்தியில் எமது தமிழ் சமூகம் எவ்வாறு வன்முறை வழிக்குச் சென்றது என்பது இன்றுவரை எம்மால் அறிய முடியவில்லை. அத்தகைய வன்முறை வழிக்கு நாம் சென்றமையினாலேயே எமது இனம் இத்தனை அழிவுகளை சந்தித்திருக்கின்றது.

தமிழ் மக்கள் வன்முறை வழிக்குச் சென்றதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். அவை நியாயமான காரணங்களாக கூட இருக்கலாம். ஆனாலும் நாம் எதற்காக வன்முறை வழிக்குச் சென்றோம் என்பது பெரும் கேள்வியாகவே இருக்கின்றது.

1972ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. இச் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு பல்வேறு அநீதிகள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1976ம் ஆண்டு எமது இறைமையினை நாங்கள் பெறவேண்டும். அந்த இறமையினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களுக்க உரித்துண்டு என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.

இததை; தொடர்ந்துதான் வன்முறை எமது தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டது. தற்போழுது இந்த வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான வன்முறையை இனி எப்பொழுதும் ஆதரிக்க முடியாது. ஏது உண்மையோ அதை முழுமையாக பின்பற்ற வேண்டும்.எங்களுக்காகவும் உண்மையை பின்பற்றுபவர்களாகவும், மற்றவர்களுக்காக உண்மையினை பின்பற்றுபவர்களாகவும் நாங்கள் இருக்க வேண்டும்.

அகிம்சையை பின்பற்றுபவர்களாகவும், அதற்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாங்கள் இருக்க வேண்டும். இன்று சர்வதேச சமூகத்தின் ஆதரவு தமிழ் மக்களுடை உரிமையினை அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு கிடைத்தமைக்கு முக்கியமான காரணம் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், சத்தியம், அகிம்சை வழியில் தமிழ் சமூதாயம் இன்று செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது.
என்ற காரணத்தினால்தான் சர்வதேசத்தின் கவனம் தமிழ் மக்கள் பக்கம் திரும்பியுள்ளது.

எமது அயல் நாடான இந்தியா இன்று உலகத்தில் ஒரு பாரிய சக்தியாக உள்ளது. பாரதப் பிரதமர் இறுதியான இலங்கைக்கு வந்த போது அவரை நாம் சந்தித்த போது அவர் என்னைப் பார்த்து, என்னை நீங்கள் நம்புகின்றீர்களா என்று கேட்டார். அப்பொழுது அவருக்கு நான் சொல்லியிருந்தேன் பரிபூரணமாக நாங்கள் உங்களை நம்புகின்றேன்.

இந்நிலையில் இந்தியாவினுடைய முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் பங்களிப்பும் உதவிகளும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: