படையினர் விசாரணைகளின் போது பாதுகாக்கப்படுவர்! பிரதமர் ரணில் உறுதி!

ranil_praminister_001இலங்கை தொடர்பில் போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் தரப்பினரின் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிட்டது யார் என்ற விசாரணையே மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தகவல் அளித்த படையினர், விடுதலைப் புலிகளில் இன்னும் 3000 பேர் புனர்வாழ்வுக்கு உட்படாத நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினர்.

-http://www.tamilwin.com

TAGS: